Medicinal Fruits: அஜீரண ஆற்றலை பெருக்கி குடல் ஆரோக்கியத்தை பேணும் வில்வம் பழம்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Medicinal Fruits: அஜீரண ஆற்றலை பெருக்கி குடல் ஆரோக்கியத்தை பேணும் வில்வம் பழம்

Medicinal Fruits: அஜீரண ஆற்றலை பெருக்கி குடல் ஆரோக்கியத்தை பேணும் வில்வம் பழம்

I Jayachandran HT Tamil
Published Jun 16, 2023 10:42 PM IST

அஜீரண ஆற்றலை பெருக்கி குடல் ஆரோக்கியத்தை பேணும் வில்வம் பழம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அஜீரண ஆற்றலை பெருக்கி குடல் ஆரோக்கியத்தை பேணும் வில்வம் பழம்
அஜீரண ஆற்றலை பெருக்கி குடல் ஆரோக்கியத்தை பேணும் வில்வம் பழம்

வயிற்றுப் புண்களுக்கு வில்வம் பழம் சிறந்த மருந்து. இதன் துவர்ப்புத் தன்மையும் மலமிளக்கித் தன்மையும் பசியை உண்டாக்கும். வில்வம் பழத்தில் பாகு செய்து, பித்தத்தினால் வரும் வயிற்று நோய்களுக்கு கொடுக்கலாம்.

ஆகவே குடலை பாதுகாக்கும் உணவுகளில் தலை சிறந்த உணவு வில்வ பழம் ஆகும். இது நாம் உண்ணும் உணவை நன்றாக செரிமானம் செய்ய உதவி, குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

சிலருக்கு எடுத்துக் கொண்ட உணவு சரியாக செரிமானம் ஆகாமல் மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு நிவாரணமாக வில்வ பழத்தின் ஓடு, விதையை நீக்கிவிட்டு சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து சர்பத் தயார் செய்து கொள்ளவேண்டும்.

இந்த சர்ப்பத்தை தினமும் குடித்து வந்தால் குடல் சுத்தமாகி உடம்புக்கு ஊட்டம் ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். கடுமையான சீதபேதியையும் குணமாக்கும் சக்தி இந்த சர்பத்துக்கு உண்டு. சிலருக்கு சளி தொல்லை அடிக்கடி இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வில்வ பழத்தை ஜூஸ் தயாரித்து காலை, மாலை எடுத்துக்கொண்டால் சளி தொல்லை நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வில்வப் பட்டை, விளாப் பட்டை, நன்னாரி, சிறு பயறு, நெற்பொரி, வெல்லம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர்விட்டு 200 மி.லியாகக் கொதிக்கவைத்து அந்தக் கஷாயத்தைக் கொடுத்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல் நீங்கும்.

வில்வ இலையை நல்லெண்ணெய்யில் காய்ச்சி, காது நோய்களுக்கு காதில்விடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது. வில்வம் பழத்தின் பாகு தயாரித்து தினமும் ஓரிரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்தலாம்.

உளவியல் நோய்களில் முதலாவதான மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து கஷாயமாக்கி சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும்.

இதயத்தை பாதுகாக்கும் உணவுகளில் வில்வப் பழமும் ஒன்று. வில்வ பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் இதயத்தை ஆரோக்கியமாக பாது காக்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மால் நீண்ட நாள்கள் வாழ முடியும்.

சிலருக்கு திடீரென வயிறு சம்பந்தமான பிரச்னைகள் உருவாகும். அந்த சமயத்தில் வில்வ பழத்தோடு பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸாக அருந்தி வந்தால் வயிற்றுப் பிரச்னை தீரும்.