உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை! வேறென்ன நன்மைகள்லாம் இருக்கு?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை! வேறென்ன நன்மைகள்லாம் இருக்கு?

உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை! வேறென்ன நன்மைகள்லாம் இருக்கு?

I Jayachandran HT Tamil
Mar 18, 2023 11:34 PM IST

உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வெந்தயக்கீரை பல்வேறு நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்

உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை
உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு குவளை தண்ணீர் விட்டு, ஒரு குவளை அளவிற்குச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை அரை குவளை வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து,

எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு சர்க்கரை சேர்த்து லேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும்.

வெந்தயக் கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக் கீரையுடன் பாசிப்பயறு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, ரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப் போக்கவும் பயன்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.