தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Tulasi Mala : மனஅழுத்தம் குறைப்பது, உணர்வுகளை முறைப்படுத்துவது, அடேங்கப்பா துளிசி மாலை அணிவதன் நன்மைகள்!

Benefits of Tulasi Mala : மனஅழுத்தம் குறைப்பது, உணர்வுகளை முறைப்படுத்துவது, அடேங்கப்பா துளிசி மாலை அணிவதன் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Jun 11, 2024 12:00 PM IST

Benefits of Tulasi Mala : மனஅழுத்தம் குறைப்பது, உணர்வுகளை முறைப்படுத்துவது என துளிசி மாலை அணிவது எத்தனை நன்மைகளை தருகிறது பாருங்கள்.

Benefits of Tulasi Mala : மனஅழுத்தம் குறைப்பது, உணர்வுகளை முறைப்படுத்துவது, அடேங்கப்பா துளிசி மாலை அணிவதன் நன்மைகள்!
Benefits of Tulasi Mala : மனஅழுத்தம் குறைப்பது, உணர்வுகளை முறைப்படுத்துவது, அடேங்கப்பா துளிசி மாலை அணிவதன் நன்மைகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

துளசி மாலையை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

நோய் எதிர்ப்பை வலுப்படுத்துகிறது

துளசியில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்ஜைக்கு எதிரான குணங்கள் உள்ளன. இது உங்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. துளசி மாலையை அணிவது பொதுவான உடல் நலக்கோளாறுகளை தடுக்க உதவி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

மனஅழுத்தம், பயத்தை போக்குகிறது

துளசியின் நறுமணத்திற்கு மனதை அமைதிப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதனால் உடல் மற்றும் மணம் இரண்டும் அமைதியடைகிறது. துளசி மாலையில் உள்ள மணிகளை அணியும்போது அல்லது தியானம் செய்யும்போது வைத்திருப்பது, மனஅழுத்தம், அச்சத்தை குறைக்க உதவு, மனத்தெளிவை ஏற்படுத்துகிறது.

சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

துளசியில் சளி, இருமல் மற்றும் சுவாச மண்டலத்தில் உள்ள தொற்றுக்களை போக்கும் குணங்கள் உள்ள அனைவரும் அறிந்த ஒன்றுதான். இது சளி, இருமல், ஆஸ்துமா உள்ளிட்டட பல்வேறு சுவாச கோளாறுகளுக்கும் தீர்வாகிறது. மேலும் சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. மூச்சுதிணறல் உள்ளிட்ட பிரச்னைகளை குணப்படுத்துகிறது.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

துளசி, கழிவுகளை நீக்கும் மற்றும் சுத்தம் செய்யும் இயற்கை மூலிகையாகும். இது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கழிவுகளை வெளியேற்றி, ஆரோக்கியமான பளபளக்கும் சருமத்தை தருகிறது.

சக்கரங்களை சமப்படுத்துகிறது

இந்திய பாரம்பரிய தத்துவத்தின்படி, உடலில் உள்ள ஆற்றல் மையங்கள் சக்கரங்கள் என்று அழைக்கப்படுகிறது. துளசி மாலையை கழுத்தில் அணிவது, உங்கள் உடல் முழுவதும் ஆற்றல் சீராக பரவுவதை உறுதி செய்கிறது. துளசியில் உள்ள மணம் மற்றும் ஆன்மீக உட்பொருட்கள், இந்த சக்கரங்களை நேர்ப்படுத்தி, உங்களின் அறிவாற்றலை அதிகரிக்கும்.

பாதுகாப்பு மற்றும் அதிர்ஷ்டம்

இந்துக்கள் இவற்றை பாதுகாக்கும் மூலிகைகளை என்று குறிப்பிடுகிறார்கள். துளிசி மாலையை அணியும்போது அது எதிர்மறை ஆற்றல்கள், துர்சக்திகள், ஆகியவற்றிடம் இருந்து பாதுகாப்பை வழங்குவதாக நம்பப்படுகிறது. இது அணிபவர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் ஆசிர்வாதத்தை வழங்குகிறது.

கவனத்தை அதிகரிக்கிறது

தியானத்தின்போது, துளசி மாலை அணிவது, கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது. துளசியின் நறுமணம் தெய்வீக சக்தியுடன் தொடர்புடையது. இந்த தெய்வீக சக்தி ஆழ்ந்த தியானம் மற்றும் மனத்தெளிவை ஏற்படுத்துகிறது.

மனஅழுத்தம் மற்றும் உணர்வு சமம்

துளசி மாலை அணியும்போது மனதை அமைதிப்படுத்தி, உணர்வை சமப்படுத்துகிறது. துளசி மாலை அணிவது நரம்பு மண்டலங்களை அமைதிப்படுத்துகிறது. பயத்தைப் போக்குகிறது. மனஅமைதியை ஏற்படுத்துகிறது.

ஆன்மீக விழிப்புணர்வு

துளசி ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் அறிவொளியை ஏற்றுகிறது. துளசி மாலை அணியும்போது உங்கள் ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கிறது. ஆன்மீக செயல்பாடுகளை ஆழப்படுத்துகிறது. உள்ளுணர்வை எழுப்புகிறது.

நேர்மறை ஆற்றல் மற்றும் ஆன்மா தூய்மை

துளசியில் சுத்தம் செய்யும் குணங்கள் உள்ளது. இது ஆன்மீக மற்றும் உடல் தூய்மைக்கு வழிவகுக்கிறது. துளசி மாலையை அணிவது ஆன்மாவை சுத்தம் செய்ய உதவுகிறது. எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. நேர்மறை ஆற்றலை உடலில் பரவச் செய்கிறது. வெளியில் இருந்து எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது

துளசி, மனஅமைதியை ஏற்படுத்துகிறது. அதனால் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது. உறங்கச் செல்லும் முன் துளசி மாலையை அணிந்துகொள்வது அல்லது தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்வது மனதை அமைதிப்படுத்தி, உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது.

ஹார்மோன்களை சமப்படுத்துகிறது

துளசி, பாரம்பரிய முறையில், ஆயுர்வேதாவில் ஹார்மோன்களை சமப்படுத்த உதவுகிறது. மேலும் எண்டோகிரைன் சிஸ்டத்தை முறைப்படுத்துகிறது. துளசி மாலையை அணிவது நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. ஹார்மோன் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளை சரிசெய்கிறது. மாதவிடாய் சூழற்சி மற்றும் மெனோபாஸ் அறிகுறிகளைப் போக்குகிறது.

கழிவுநீக்கம் மற்றும் தூய்மை

துளசியில் கழிவை நீக்கக்கூடிய குணங்கள் உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களைப் போக்குகிறது. உடலின் இயற்கை கழிவுநீக்கத்துக்கு உதவி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

எதிர்மறை எண்ணங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது

துளசி, பாதுகாக்கும் திறன்களை கொண்டது. இது எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு கவசம் அளிக்கிறது. இது பாதுகாப்பை அளிக்கிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்