Benefits of Tripala Choranam : தினமும் இரவில் இந்தப்பொடி மட்டும் போதும்! மருத்துவமனைக்கே செல்ல தேவையில்லை!
Benefits of Tripala Choranam : மழை காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பருகினால் நல்லது. மலச்சிக்கல் பிரச்னைகள் இருக்காது. கண் நன்றாக பளிச்சென்று தெரியும். உடலை சுறுசுறுப்பாக்கும். கோடை காலத்திலும் வெறும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
இன்றைய மாறிவரும் காலநிலையில் 30 வயதை கடந்தாலே நம்மை நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. இதற்கு காரணம் நமது உணவுமுறை மாற்றம்தான். இதனால் அதற்குப்பின்னர் நாம் ஏதாவது ஒரு மாத்திரையை சாப்பிடவேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டுமெனில் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும்.
சரிவிகித உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற அனைத்தும் செய்யும்போது, அது உங்கள் ஆரோக்கியம் மேம்பட உதவும். தினமும் இரவில் இந்தப்பொடியை சாப்பிடும்போது, எந்தவித மருந்தும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. இந்தப்பொடி உங்களுக்கு அத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது.
நெல்லிக்காய் 4 பங்கு, தான்றிக்காய் 2 பங்கு, கடுக்காய் ஒரு பங்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து எடுப்பது திரிபலா சூரணம். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.
திரிபலா சூரணத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வயோதிகத்தை தள்ளிப்போடும். இளமையை தக்கவைக்கும். புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடி, புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
திரிபலா சூரணம், உணவுப்பாதையில் உள்ள நச்சுக்களை நீக்கி குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. செரிமான கோளாறை சரிசெய்து உடலில் இருக்கக்கூடிய நச்சுப்பொருட்களை நீக்குகிறது. சிறந்த மலமிலக்கியாகவும் செயல்பட்டு மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுகிறது.
வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கம் மற்றும் மற்ற புழுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களை கட்டுப்படுத்த உதவுகிறது. கணையத்தில் இன்சுலீன் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலின் குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
திரிபலாவின் கசப்புச்சுவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதை தாராளாமாக எடுத்துக்கொள்ளலாம்.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த சோகை நோயை சரிசெய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உடலில் உள்ள வளர்சிதையை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ளும் எண்ணம் உள்ளவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.
ரத்தத்தை சுத்தம் செய்கிறது. ரத்தத்தில் சுத்திகரிக்கிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வர முகம் பளிச்சென்று இளமையாக பளபளக்கும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாமல் சருமத்தை எப்போதும் பாதுகாப்பாக வைக்கிறது.
மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்துகிறது. சைனஸ் நோயை நீக்கி, சுவாசப்பாதையில் உள்ள சளியை போக்குகிறது.
உடலில் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வலிகளை சரிசெய்கிறது. அல்சரை குணப்படுத்துகிறது. கண் பார்வை கோளாறை சரி செய்கிறது. உடல் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. ஆண்மையை அதிகரிக்கிறது. திரிபலா சூரணத்தில் பனங்கற்கண்டு மற்றும் பசும்பால் கலந்து பருகினால், ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
இளநரை மற்றும் முதுநரையை சரிசெய்யும். இளமையாக இருக்க உதவும். திரிபலா சூரணத்தை 5 கிராம் அதாவது அரை ஸ்பூன் வரை மட்டும்தான் சேர்க்க வேண்டும்.
இதை தேனில் கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் சாப்பிடவேண்டும். சர்க்கரை நோயாளிகள் நெய் கலந்து சாப்பிடலாம். அவர்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
மழை காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பருகினால் நல்லது. மலச்சிக்கல் பிரச்னைகள் இருக்காது. கண் நன்றாக பளிச்சென்று தெரியும். உடலை சுறுசுறுப்பாக்கும். கோடை காலத்திலும் வெறும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
இதை கர்ப்பிணிகள், கர்ப்பத்துக்கு முயற்சிப்பவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் சித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.
இது நாட்டு மருந்துக்கடைகள் மற்றும் மாற்று மருந்து கடைகளில் பொடியாகக் கிடைக்கிறது. அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், உங்கள் உடலில் உபாதைகளை ஏற்படுத்திவிடும். இது நமது பாரம்பரிய மருந்து. இதை தொடர்ந்து சாப்பிட நீங்கள் மருத்துவமனை செல்ல வேண்டிய தேவை ஏற்படாது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்