Benefits of Sun Salutation : காலையில் 3 முறை சூரிய நமஸ்காரம்; உடலில் என்ன நடக்கிறது? 8 நன்மை உண்டு என்று கூறப்படுகிறது!
Benefits of Sun Salutation : சூரிய நமஸ்காரத்தின் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.

Benefits of Sun salutation : அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகளும், நிபுணர்களும் கூறுகின்றனர். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். தினமும் காலையில் 3 முறை சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். இதனால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் நன்மைகள் கிடைக்கிறது. இது உங்கள் உடலின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது. உடலுக்கு வலு கொடுக்கிறது. உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
உடலின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது
உங்கள் உடலில் உள்ள தசைகளை நன்றாக விரிவடையச் செய்து உடலின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடலின் இயக்கத்தை அதிகரிக்கிறது. தசைகளில் இறுக்கத்தைப் போக்குகிறது. இது உங்கள் உடலுக்கு இதமளிக்கிறது. அதிகம் இயங்குவது உங்கள் உடலுக்கு நல்லது. உடல் திறனுடன் செயல்பட உதவும்.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
இது உங்கள் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற உதவுகிறது. இது உங்கள் உடலை கழிவுநீக்க உதவுகிறது. உங்கள் உடலை தொற்றுகளில் இருந்து காத்து உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்யும்போது ஆழ்ந்த மற்றும் கட்டுப்பாடான மூச்சுப்பயிற்சிகளை மேற்கொள்கிறீர்கள். இதனால் உங்களின் நுரையீரல் விரிசிகிறது. நன்றாக சுருங்கி விரியும்போது, அது உங்கள் நுரையீரலின் திறனை அதிகரித்து, உங்கள் உடல் ஆக்ஸிஜனை எடுக்கும் திறனை அதிகரித்து, உங்கள் சுவாச மண்டலத்தின் திறனுக்கு உதவுகிறது.
ஹார்மோன்களின் அளவுகளை முறைப்படுத்துகிறது
இது எண்டோகிரின் சுரப்பியை முறைப்படுத்துகிறது. ஹார்மோன்களை நிலைப்படுத்துகிறது. மனநிலையை மேம்படுத்துகிறது. ஒட்டுமொத்த உணர்வுகளின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
இது உடலின் வளர்சிதையை அதிகரித்து, கலோரிகள் எரிக்கும் திறனை அதிகரித்து, ஆரோக்கியமான உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது. நீங்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்யும்போது அது உங்கள் உடல எடையை குறைக்க உதவுகிறது.
தசைகளுக்கு வலு கொடுக்கிறது
சூரிய நமஸ்காரப் பயிற்சி உங்கள் உடலில் உள்ள தசைகளுக்கு வலுகொடுக்கிறது. கைகள், பின்புறம் மற்றும் தொடை, கால்களில் உள்ள தசைகள் வலுவடைய சூரிய நமஸ்காரத்தின் சில போஸ்கள் உதவுகின்றன. இது உங்கள் உடலின் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்யும்போது, அது உங்கள் உடலின் உள்ளே உள்ள உறுப்புக்களை தூண்டுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தையும் கட்டுப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியம் மற்றும் உடல் நலனுக்கு சிறந்தது.
மனஅழுத்தத்தைக் குறைக்கிறது
ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி உங்களின் மனதை ரிலாக்ஸ் செய்கிறது. இதமான மூவ்மென்ட்கள், உங்களின் மனஅழுத்தத்தை முற்றிலும் குறைக்கிறது. டென்சனைப் போக்கி, உங்களின் பயத்தை குறைத்து, மனதை அமைதிப்படுத்துகிறது. இது உங்கள் மனதுக்கு அமைதியைத் தருகிறது. இது உங்கள் மனதுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது.
இத்தனை நன்மைகளை உங்களுக்கு அள்ளி வழங்குவதாக கூறப்படும் இந்த சூரிய நமஸ்காரத்தை நீங்கள் உங்கள் அன்றாட காலை வழக்கத்தில் இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியாக வாழுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்