தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Priyadarshini R HT Tamil
May 20, 2024 04:13 PM IST

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த விஷயம் தெரிந்தால், இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்.

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!
Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

மாடிக்கு செல்வதற்கு படிகட்டுகளை பயன்படுத்துபவரா?

மாடிக்கு படிகளில் ஏறிச்செல்வது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் அதனால் ஏற்படும் நல்ல பலன்களை தெரிந்துகொள்ளுங்கள். அது ஒரு சிறந்த உடற்பயிற்சியான உள்ளது. ஒரு உடற்பயிற்சி அளவுக்கு நன்மைகளைக் கொடுக்கிறது. 

எனவே தினமும் 2 அல்லது 3 மாடிகள் படிகளில் ஏறிச்சென்றீர்கள் என்றால், அது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. அது என்னவென்று தெரிந்துகொண்டால் நீங்கள் தினமும் மாடிக்கு படிகளில் செல்ல மாட்டீர்கள். ஏறித்தான் செல்வீர்கள்.

இதய ஆரோக்கியம்

படிகளில் ஏறிச்செல்வது உங்கள் இதயத்துக்கு நீங்கள் தரும் ஒரு உடற்பயிற்சியாகும். படிகட்டுகளில் நீங்கள் ஏறும்போது உங்கள் இதயம் வேகமாக ரத்தத்தை பம்ப் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது இதய நோய்கள் மற்றும் பக்கவாத ஆபத்தை தடுக்கிறது.

தசைகளை வலுப்படுத்துகிறது

படிகட்டுகளில் ஏறுவது உங்கள் தசைக்கும், கால்களுக்கும் வலுகொடுக்கிறது. உங்கள் தொடையில் உள்ள தசைகள், தொடை எலும்புகள், கணுக்கால்கள் என உங்கள் உடலின் கீழ்பகுதியை வலுப்படுத்தி, அதன் நிலையான தன்மைக்கு வழிவகுக்கிறது.

கலோரிகளை எரிக்கிறது

படிகளில் ஏறும்போது கலோரிகள் நன்றாக குறைக்கப்படுகிறது. உடல் எடையை பராமரிப்பதில், மாடிப்படிகளில் ஏறிச்செல்வது உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தினமும் படிகளில் ஏறும் திறனையும், நடக்கும் திறனையும் அதிகரிக்கிறது

வழக்கமாக படிகட்டுகளில் ஏறுவது தினமும், நீங்கள் ஏறிச்செல்ல தூண்டுவதுடன், அதற்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது. இதனால் நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். இது ஒட்டுமொத்த ஃபிட்னஸ் மற்றும் ஆற்றலைக் கொடுக்கிறது.

எலும்பு ஆரேக்கியம்

படிகட்டுகளில் ஏறும்போது, எலும்பு வளர்ச்சியை அது ஊக்குவிக்கிறது. அடர்த்தியான எலும்பு உருவாக உதவுகிறது. இது எலும்புப்புரை நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. உங்கள் உடலின் எலும்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உங்கள் உடலில் சமநிலைக்கும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்

படிகட்டுகளில் ஏறுவது, உங்கள் உடலின் சமநிலைக்கும், ஒருங்கிணைந்து செயல்படுவதறகு உதவுகிறது. நீங்கள் எங்கும் விழுந்துவிடாமல் நடப்பதற்கு உதவுகிறது. குறிப்பாக வயதான காலத்தில் நீங்கள் நிலை தடுமாறாமல் இருக்க உதவுகிறது.

உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது

நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது அது உங்கள் உடலில் எண்டோர்ஃபில்களை வெளியிடுகிறது. இந்த நியூரோடிரான்ஸ்மிட்டர், மகிழ்ச்சி உணர்வையும், நேர்மறை எண்ணத்தையும் கொடுக்கிறது. இதனால் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, மனஅழுத்தத்தை குறைக்கிறது.

உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது

நீங்கள் படிகட்டுகளில் ஏறும்போது, உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் உங்கள் உடல் உறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இது உங்கள் உடலுக்கு இயற்கை ஆற்றலைக்கொடுக்கிறது. இதனால் உங்களுக்கு சோர்வு உணர்வு போகிறது.

எங்கும் எளிதாக செய்யலாம்

படியில் ஏறுவது என்பதை நீங்கள் எங்கும் எளிதாக செய்துவிடலாம். இதற்கு உங்கள் மாடி மட்டுமே போதும் வேறு எதுவும் தேவையில்லை. இது ஒரு உடற்பயிற்சியாகவும், அதிலும் எளிதாகக் கிடைக்கும் பயிற்சியாகவுத் உள்ளது. இதை அனைத்து வயதினரும் எளிதாக எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

நாம் இன்று படிகட்டுகளுக்குப்திலாக லிஃப்ட்களை பயன்படுத்துகிறோம் அல்லது எஸ்கலேட்டர்களில் பயணிக்கிறோம். இதனால் நமக்கு ஆற்றல் விரையமாகிறது. கார்பன் உமிழ்வும் அதிகமாகிறது. சுற்றுச்சூழலை கருத்தில்கொண்டும் நாம் படிகட்டுகளை உபயோகிக்கலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்