Benefits of Squats : தோப்புக்கரணம் பனிஷ்மென்ட் அல்ல; அதன் நன்மைகளை கேட்டால், போட்டுக்கொண்டே இருப்பீர்கள்!
Benefits of Squats : தோப்புக்கரணம் பனிஷ்மென்ட் அல்ல; அதன் நன்மைகளை கேட்டால், போட்டுக்கொண்டே இருப்பீர்கள் என்றால் நம்பமுடிகிறதா? தொடர்ந்து படியுங்கள்.

தோப்புக்கரணம் போடுவதை பனிஷ்மென்டாகத்தான் காலங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது. நமது இடுப்பு முதல் கால் பகுதி வரையிலான உடல் பாகங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால், நமக்கு அதற்கு உதவுவது தோப்புக்கரணம் மட்டும்தான். தோப்புக்கரணம் போடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உங்கள் உடலை வலுப்படுத்தும்
நீங்கள் சரியான முறையில் தோப்புக்கரணம் போட்டால், அது உங்கள் முழு உடலுக்கும் நன்மை தருகிறது. மேலும் உங்கள் வயிற்றுப்பகுதி வலுப்பெறும். மேலும் ஆராய்ச்சிகள், உங்கள் அடிவயிறு மற்றும் தொடடைப்பகுதிகளில் உள்ள தசைகள் இறுக்கமாகி, உங்கள் கால்களுக்கு நல்ல வலுவைக்கொடுக்கிறது.
மூட்டுகள் மற்றும் முழங்கால்களை வலுப்படுத்தும்
தோப்புக்கரணம் போடுவதால், உங்கள் மூழங்கால்களுக்கு நெகிழ்தன்மை அதிகரிக்கிறது. மேலும் அதில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. உங்களின் முழங்கால்களை வளைத்து நெளிக்கும்போது, அது உங்கள் முழங்கால் தசைகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டுகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மேலும் மூட்டுப்பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உங்கள் உடல் வலுவாக இது உதவுகிறது.