Benefits of Soaked Raisins : எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவது எதற்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Benefits Of Soaked Raisins : எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவது எதற்கு?

Benefits of Soaked Raisins : எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவது எதற்கு?

Updated Jun 16, 2024 11:47 AM IST Priyadarshini R
Updated Jun 16, 2024 11:47 AM IST

  • Benefits of Soaked Raisins : எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவது எதற்கு?

உலர் திராட்சையின் நன்மைகள் - உலர் திராட்சைகளில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதை ஊறவைத்து சாப்பிடும்போது, அதன் நன்மைகள் பன்மடங்கு பெருகுகிறது. இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்க என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது பாருங்கள்.

(1 / 11)

செரிமானத்தை அதிகரிக்கிறது - உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும்போது அதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்துக்கு உதவுகிறது. வழக்கமான குடல் இயக்கத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கலைப் போக்குகிறது. ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மலத்தை இலக்குகிறது. மலம் செய்யும் பாதையை சுத்தம் செய்கிறது.

(2 / 11)

நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது - உலர் திராட்சையில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதை நீங்கள் ஊறவைத்து சாப்பிடுவதால், உடலில் தொற்றுகளை போக்குகிறது. நோய்களை எதிர்த்து உடல் போராடுவதற்கு தேவையானவற்றை செய்கிறது.

(3 / 11)

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது - திராட்சையில் கால்சியம் மற்றும் போரான் அதிகம் உள்ளது. திராட்சையை ஊறவைத்து எலும்பு ஆரோக்கியத்தை அதிகரித்து, எலும்புப்புரை நோய் போன்றவற்றை தடுக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகள் உருவாக்க உதவுகிறது. குறிப்பாக நீங்கள் வயோதிகத்தை எட்டும்போது எலும்பு ஆரோக்கியம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

(4 / 11)

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது - ஊறவைத்த திராட்சையை பயன்படுத்தும்போது, அது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. 

(5 / 11)

எடை மேலாண்மைக்கு உதவுகிறது - இதில் உள்ள இயற்கை இனிப்புகளால், திராட்சையில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதனால் அவர்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும். இதனால், உடல் எடை மேலாண்மை செய்ய உதவுகிறது.

(6 / 11)

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது - ஊறவைத்த உலர் திராட்சைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக அதில் வைட்டமின் சி மற்றும் ஃபினோலிக் உட்பொருட்கள் அதிகம் உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஃப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்துகிறது. இது கொலோஜென் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சருமத்தை இளமையாக பராமரிக்கிறது.

(7 / 11)

ஆற்றல் அளவை அதிகரிக்கிறது - உலர் திராட்சையில் உள்ள இயற்கை சர்க்கரைகளான, குளுக்கோஸ் மற்றும் ஃப்ரூட்டோஸ் ஆகியவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். இது யாருக்கு அதிக சர்க்கரை அளவு தேவையோ அவர்களுக்கு இது மிகவும் அவசியம். குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளின்போது மிகவும் நல்லது.

(8 / 11)

சுவாச ஆரோக்கியத்துக்கு அதிகரிக்கிறது - ஊறவைத்த திராட்சையை பயன்படுத்துவது, பாரம்பரியமாக சுவாச பிரச்னைகளை குறைக்க உதவுகிறது. சளி மற்றும் இருமல் தொல்லைகளை போக்குகிறது. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், பாக்டீரியாக்கள் எதிர்க்கும் குணங்கள், தொண்டை கரகரப்பை குறைக்கிறது. எரிச்சலை குறைக்க உதவுகிறது. இது உங்கள் சுவாச பிரச்னைகளை போக்குவதற்கு இயற்கை நிவாரணம் அளிக்கிறது.

(9 / 11)

திராட்சையை ஊறவைப்பது எப்படி?தேவையான பொருட்கள்உலர் திராட்சை – 10நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

(10 / 11)

திராட்சையை ஊறவைப்பது எப்படி?
தேவையான பொருட்கள்

உலர் திராட்சை – 10

நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

ஊறவைப்பது எப்படி?ஒரு டம்ளர் தண்ணீரில் திராட்சையை சேர்த்து 8 மணி நேரம் அல்லது ஓரிரவு ஊறவைக்க வேண்டும்.ஊறவைத்த உலர்ந்த திராட்சைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்டவேண்டும்.அப்படி சாப்பிடும்போது அதன் பலன்கள் அதிகரிக்கும்.

(11 / 11)

ஊறவைப்பது எப்படி?
ஒரு டம்ளர் தண்ணீரில் திராட்சையை சேர்த்து 8 மணி நேரம் அல்லது ஓரிரவு ஊறவைக்க வேண்டும்.

ஊறவைத்த உலர்ந்த திராட்சைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்டவேண்டும்.

அப்படி சாப்பிடும்போது அதன் பலன்கள் அதிகரிக்கும்.

மற்ற கேலரிக்கள்