Benefits of Soaked Dry Figs : உலரவைத்த அத்தியை ஊறவைத்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்!
Benefits of Soaked Dry Figs : ஊறவைத்த ட்ரை அத்தியை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
அத்திப்பழம் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதை பழமாகவும் சாப்பிடலாம் அல்லது உலரவைத்த அத்தியையும் சாப்பிடலாம். உலர வைத்த அத்தியை ஓரிரவு ஊறவைக்கவண்டும். அப்போதுதான் அதில் உள்ள ஊட்டச்சத்தின் அளவுகள் அதிகரிக்கும்.
அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. ஊறவைத்த அத்தியை தினமும் இரண்டு எடுத்துக்கொள்வதால் அது உங்கள் உடலுக்கு கொடுக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
நார்ச்சத்துக்கள் நிறைந்தது
ஊறவைத்த அத்தியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நார்ச்சத்துக்கள் உடலின் செரிமான ஆரோக்கியத்துக்கு மிகவும் அத்யாவசியமானது. குடல் இயக்கம் நன்றாக இருப்பதற்கு இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உதவுகிறது. இது மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உலர்ந்த அத்தியில் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை முறைப்படுத்த உதவக்கூடிய ஒரு மினரல். ஊறவைத்த அத்திகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது ரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோய் மேலாண்மை
இதில் உள்ள இயற்கை இனிப்பு சுவையால், இந்த பழம் குறைவான கிளைசமிக் உணவுகள் பட்டியலில் உள்ளது. இதை நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாக மாற்றுகிறது. ஊறவைத்த அத்திப்பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இதனால் இது நீரிழிவு நோயை முறையாக பராமரிக்க உதவுகிறது.
உடல் எடை குறைப்பில் உதவுகிறது
அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமும் உள்ளது. இதனால், இதை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்னாக்ஸாக பயன்படுத்த முடியும்.
குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பழத்தை சாப்பிடும்போது, இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது. இதனால் உங்களின் பசி கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஊறவைத்த அத்தியில் கால்சியச் சத்துக்கள் நிறைந்தது. இது வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புக்கு மிகவும் அவசியம். எலும்பை வலுவுடனும், ஆரோக்கித்துடனும் பராமரிக்க உதவுகிறது. உங்கள் உணவில் அத்திப்பழங்களை சேர்த்துக்கொள்வது உங்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.
எலும்பு தேய்மானத்தை குறைத்து, எலும்பு புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக மெனோபாஸ்க்கு முந்தைய காலத்தில் உள்ள பெண்களின் கால்சிய தேவையை பூர்த்தி செய்கிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவானாய்ட்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை பலப்படுத்துகிறது. உடலை தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து காக்கிறது. ஊறவைத்த அத்தியை நீங்கள் உங்கள் உணவில் வழக்கமாக சேர்த்துக்கொள்ளும்போது அது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
ஊறவைத்த அத்தியில் உள்ள வைட்டமின் இ, சிங்க் போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள், சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது சருமத்தில் கொலோஜென் உற்பத்திக்கு உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. ஆக்ஸிடேட்டில் சேதத்துக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. இந்த அத்தியை உங்கள் உணவில் சேர்க்கும்போது அது உங்கள் சருமத்துக்கு இளமை தோற்றத்தை கொடுக்கிறது.
செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
நார்ச்சத்துக்களுடன், அத்தியில், செரிமான எண்சைம்கள் உள்ளது. அது ஊட்டச்சத்துக்களை உடைத்து, உடல் அதை உறிஞ்ச உதவி செய்கிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. ஊறவைத்த அத்திப்பழங்கள், செரிமான பிரச்னைகளை தீர்க்கிறது. ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது
அத்தியில், கவுமரின்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் போன்ற ஃபைட்டோகெமிக்கல்கள் உள்ளன. இதில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன. ஊறவைத்த அத்தியை வழக்கமாக எடுத்துக்கொள்வதால், அது சில வகை புற்றுநோய்களை தடுக்க உதவுகிறது. குடல் மற்றும் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கிறது.
உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது
அத்திப்பழங்கள், டிரிப்டோஃபான்களின் இயற்கை மூலம், இது ஒரு அமினோ அமிலம், செரோட்டினின் மற்றும் மெலோட்டினின் ஆகியவற்றை உடல் உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு ஹார்மோன்களும் மகிழ்ச்சியைத் தரக்கூடியவை. உறக்கத்தை முறைப்படுத்துகிறது. எனவே உறங்கச்செல்லும் முன் ஊறவைத்த அத்தியை உட்கொள்வது, உங்களின் மூளை அமைதிப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்துக்கு அழைத்துச் செல்லும்.
டாபிக்ஸ்