Skin Care: உடலில் தேமலை ஒரேவாரத்தில் போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Skin Care: உடலில் தேமலை ஒரேவாரத்தில் போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

Skin Care: உடலில் தேமலை ஒரேவாரத்தில் போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

I Jayachandran HT Tamil
Published Jun 16, 2023 08:22 PM IST

உடலில் தேமலை ஒரேவாரத்தில் போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உடலில் தேமலை ஒரேவாரத்தில் போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்
உடலில் தேமலை ஒரேவாரத்தில் போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

உடலுக்கு சோப்பு தவிர கடலை மாவு, பாசிப்பருப்பு, மஞ்சள் போன்ற இயற்கை மருத்துவ பொருட்களையும் நாம் வாரத்துக்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தேமல் போன்ற பிரச்னைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி பார்ப்போம்.

பூவரச மரத்தின் காய்களை பறித்து அம்மியில் வைத்து அரைத்து அதன் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் அகலும். அருகம்புல் உடல்நலத்திற்கும், ரத்தத்தை சுத்தம் செய்யவும் முக்கியமானது. இதனை அரைத்து தேமல் உள்ள இடத்தில் பயன்படுத்தலாம்

நாயுருவி இலையை அரைத்து அதன் சாறை தடவி வந்தால் தேமல், படை போன்றவை குணமாகும். கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி அதனை பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து வந்தால் தேமல் குணமடையும். எலுமிச்சை தோலை உலர்த்தி அதனை தூளாக்கி படிகாரம் கலந்து குழைத்து பூசி வந்தால் தேமல் குணமடையும்.

மஞ்சளை இடித்து நல்லெண்ணெயில் போட்டு தேமல் உள்ள இடத்தில் பூச வேண்டும். சுக்குடன் சிறிது துளசி இலையை வைத்து மையாக அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வரும்பொழுது தேமல் குணமடையும்.

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து முகத்தில் தடவ கரும்புள்ளி, தேமல் போன்றவை குணமாகும். கருஞ்சீரகத்தை எண்ணெய் விட்டு வறுத்து அதனை அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசலாம்.

சிறிய காயங்கள், உடல் வலி, சரும பாதுகாப்புக்கு, இருமல், மூல வியாதிக்கு, கண் பாதுகாப்புக்கு என்ற பல உடல் ஆரோக்கிய பிரச்னைகளுக்கு அதிகளவு படிகாரம் மருத்துவ பயன்கள் பெரிதும் உதவுகிறது. இந்த படிகாரம் முடி வளர்வதற்கு, சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்குவதற்கும் பயன்படுகிறது.

சிறிது படிகாரத்தை தூளாக்கி தண்ணீரில் கலந்தால் ஜில்லென்று ஆகிவிடும் அந்தக் கலவையை தேமல் இருக்கும் இடத்தில் தடவிவந்தால் ஒரே வாரத்தில் தேமல் மறைந்து விடும்.