Tamil News  /  Lifestyle  /  Benefits Of Sapotta
சப்போட்டா பழம்
சப்போட்டா பழம்

Healthy Fruits: சப்போட்டா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

24 May 2023, 18:09 ISTI Jayachandran
24 May 2023, 18:09 IST

சப்போட்டா பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

சப்போட்டா பழத்தின் தோலைப் பார்த்து பல பேர் அதை சாப்பிடாமல் ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் சப்போட்டாவில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.

சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம். பொடுகு தொல்லை நீங்க சப்போட்டா விதைகளை விழுது போல நன்றாக அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து இரவில் படுக்கும் போது மண்டையோட்டில் நன்றாக படும்படி தேய்த்து பின்பு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விட வேண்டும். இது தலைமுடிக்கு மென்மையை தருவதோடு பொடுகையும் நீக்கும்.

கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது. சத்து குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது.

சப்போட்டாவின் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலின் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. மலச்சிக்கல் நீங்க உதவுகிறது. நம் குடலானது ஆரோக்கியமாக செயல்படும் போது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

கர்ப்பிணி பெண்களுக்கு சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற சத்துக்கள் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலிற்கு இயற்கையாகவே ரத்தத்தை உறையவைக்கும் சக்தி வந்துவிடும். மன அழுத்தம் நீங்க நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்க்கு உள்ளது.

இந்த சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை, பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.

டாபிக்ஸ்