Benefits of Rudraksha : நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும்! ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் உடலுக்கு எத்தனை நன்மைகள்!
Benefits of Rudraksha : நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும்! ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் உடலுக்கு எத்தனை நன்மைகள் ஏற்படுகிறது என்று பாருங்கள்.

ருத்ராக்ஷ மாலையில் எத்தனை மணிகள் கோர்க்கலாம்?
ருத்ராக்ஷத்தை பெரும்பாலானோர் உலகம் முழுவதும் விரும்பி அணிகிறார்கள். இது மதரீதியாக பல்வேறு முக்கியத்துவத்தைக் கொண்டது. எனினும், இந்த மணிகளை அணிவதால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இந்த மணிகளை மாலையாக கோர்த்து அணிகிறார்கள். அறிவியல் ரீதியாக 108 மணிகளை கோர்த்து நாம் பயன்படுத்தவேண்டும்.
அதில் கூடுதலாக ஒன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அந்த ஒன்றுதான், உடலுக்கு செல்லும் ஆற்றலை முறைப்படுத்துகிறது. இதைத்தவிர 84 மணிகள் கோர்த்தும், அதனுடன் ஒன்று கூடுதலாகவும் சேர்த்து பயன்படுத்தலாம்.
இந்த மாலையை பருத்தி அல்லது பட்டு நூலில் கோர்க்கலாம். கொஞ்சம் லூசாக கோர்க்கவேண்டும். அனைத்து மணிகளுக்கும் இடையில் இடைவெளி இருக்கவேண்டும்.
ருத்ராக்ஷத்தை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ருத்ராக்ஷ மாலையை அணியும்போது அது எதிர்மறை எண்ணங்களிடம் இருந்து நம்மை காக்கிறது. நமக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறது.
நீங்கள் எப்போதும் மனக்குழப்பத்தில் இருக்கும் நபர் என்றால், இந்த மணிகள், உங்களுக்கு சிறந்தது. இது உங்களுக்கு நிலைத்தன்மை மற்றும் சிறந்த ஆதரவைக் கொடுக்கும். உங்களைச் சுற்றி பாதுகாப்பு கவசத்தைக் ஏற்படுத்தும்.
உணவும், ருத்ராக்ஷமும்
ருத்ராக்ஷ மாலை, நீங்கள் உட்கொள்ளும் உணவு அல்லது தண்ணீர் சுத்தமாக உள்ளதா என்பதை சுட்டிக்காட்டும். ருத்ராக்ஷத்தில் தண்ணீரை ஊற்றினால் அது கடிகார வட்டத்தில் சுற்றினால், அந்த தண்ணீர் தூய்மையானது என்று பொருள். அதை நீங்கள் பருகலாம். ஆனால் அது கடிகார முள்ளுக்கு எதிர் திசையில் சுற்றினால் அது சுத்தமான தண்ணீர் கிடையாது.
குடிப்பதற்கு உகந்ததல்ல என்று பொருள். அதேதான் உணவுப்பொருட்களுக்கும். வீட்டில் சமைத்த உணவு பாத்திரத்துக்கு மேல் ருத்ராக்ஷத்தை பிடியுங்கள். அது கடிகார முள் திசையில் சுழலும். இதுவே நீங்கள் பாக்கெட் உணவுகளின் மீது பிடித்தால், அது கடிகார முள்ளுக்கு எதிர் திசையில் சுழலும்.
முகங்கள்
ஒரு முகம் கொண்ட ருத்ராக்ஷம், அதிக சக்தி வாய்ந்தது. இது தனிமை உணர்வை அணிபவருக்கு ஏற்படுத்தும். எனவே நிபுணர்களின் அறிவுரையோடுதான் இந்த ருத்ராக்ஷத்தை அணியவேண்டும்.
பஞ்ச முகம் அதாவது 5 முகங்கள் கொண்ட ருத்ராக்ஷத்தை யார் வேண்டுமானாலும், வயது, பாலின வேறுபாடின்றி அணியலாம். இது உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைத்து உங்கள் உடலின் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் தன்மை கொண்டது.
இதை அணியும்போது, அணிபவர் சிறந்த செயலூக்கம் உள்ளவராக இருப்பார். எச்சரிக்கையுடன் நடப்பார். குழந்தைகளுக்கு கவனத்தை அதிகரிக்க ருத்ராக்ஷங்கள் உதவுகிறது. ருத்ராக்ஷத்தை அணியும்போது வாழ்க்கை தூய்மையாகிறது.
ருத்ராக்ஷம் பிரார்த்தனைகள், தியானங்கள் செய்யும்போது அணியப்படுகிறது. இதை உடலில் அணியும்போது அது சரும பிரச்னைகளையும் தீர்க்கிறது. சருமத்தில் அரிப்பு, எரிச்சல், புண் மற்றும் காயங்களை ஆற்றுகிறது.
காப்பர் பாத்திரத்தில் ருத்ராக்ஷத்தை சேர்த்து ஓரிரவு ஊறுவிடவேணடும். அடுத்த நாள் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பருகவேண்டும். உங்கள் சரும பிரச்னைகள் தீரும். 9 முகங்கள் கொண்ட ருத்ராக்ஷத்த துளசியுடன் அரைத்து காயங்களில் தடவினால் காயங்கள் குணமடையும்.
ருத்ராக்ஷத்தை பொடி செய்து அதை கடுகு எண்ணெயுடன் கலந்து மூட்டுகளில் தடவினால், அது மூட்டு பிரச்னைகளை சரிசெய்யும். ருத்ராக்ஷப்பொடியுடன் துளசி மற்றும் தேன் கலந்து சாப்பிட சளி மற்றும் இருமல் குணமாகும்.

டாபிக்ஸ்