தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Rice One Grain A Day Do You Know What Is In The Daily Food Rice

Benefits of Rice : தினம் ஒரு தானியம்! அன்றாட உணவான அரிசியில் என்ன உள்ளது தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jan 20, 2024 08:30 AM IST

Benefits of Rice : தினம் ஒரு தானியம்! அன்றாட உணவான அரிசியில் என்ன உள்ளது தெரியுமா?

Benefits of Rice : தினம் ஒரு தானியம்! அன்றாட உணவான அரிசியில் என்ன உள்ளது தெரியுமா?
Benefits of Rice : தினம் ஒரு தானியம்! அன்றாட உணவான அரிசியில் என்ன உள்ளது தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

131 கலோரிகள், 2.8 கிராம் புரதச்சத்து, 0.4 கிராம் கொழுப்பு, 31.1 கிராம் கார்போஹைட்ரேட், 0.5 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளன.

100 கிராம் பிரவுன் அரிசியில் உள்ள சத்துக்கள் –

132 கலோரிகள், 3.6 கிராம் புரதச்சத்து, 0.9 கிராம் கொழுப்பு, 29.2 கிராம் கார்போஹைட்ரேட், 1.5 கிராம் நார்ச்சத்துக்கள், 48 மில்லிகிராம் மெக்னீசியம், 125 கிராம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது

பிரவுன் அரிசி நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்தது. உடலில் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் நிலையாக உடலுக்கு சக்தியை வழங்கும். பிரவுன் அரிசி சாப்பிடும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மற்றும் சாப்பிடுவதற்கு முந்தைய இன்சுலின் அளவு குறைகிறது. இவையனைத்தும், உடலில் சக்தி அளவை நிலைப்படுத்துகின்றன. அது சாப்பிடும் உணர்வை கட்டுப்படுத்துகிறது. எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

வெள்ளை அரிசி, உடல் எடையை அதிகரிக்கச்செய்கிறது. வயிற்றில் கொழுப்பு சேர்வதையும் அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. அது உங்கள் உடலில் எடையை அதிகரிக்கிறது.

பிரவுன் அரிசி நாள்பட்ட நோய்களை தடுக்கிறது

பிரவுன் அரிசியில், அபிஜெனின் மற்றும் குயிர்செட்டின் என்ற ஃப்ளேவனாய்ட்ஸ் உள்ளது. இவை நோய்களுக்கு எதிராக போராடுகிறது. பிரவுன் அரிசி போன்ற முழு தானிய உணவுகள் இதய நோய்களை தடுக்கிறது. கணைய புற்றுநோய், குடல் புற்றுநோய், டைப்-2 நீரிழிவு ஆகியவற்றை தடுக்கிறது.

உடல் சக்திபெற உதவுகிறது

விளையாட்டு வீரர்களுக்கு அரிசி உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. குறிப்பாக அவர்கள் பயிற்சி முடித்தவுடன் தேவைப்படும் சக்தியை அது வழங்குகிறது. இதில் கார்போஹட்ரேட்கள் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான உடனடி கார்போஹைட்ரேட் தேவையை பூர்த்தி செய்கிறது. தசைகளை வலுவடையச்செய்து உடலை பலமாக்குகிறது.

எளிதாக செரிமானம் அடைகிறது

அரிசிதான் எளிதில் செரிமானமடையக்கூடிய உணவு. காய்ச்சல் மற்றும் நோய் கண்டவர்கள் எடுத்துக்கொள்ளும் முதல் உணவு, குழந்தைகளின் முதல் உணவு அரிசி கஞ்சிதான். குறிப்பாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி கஞ்சி சிறந்த நிவாரணத்தை தருகிறது. இது பல்வேறு வியாதிகளையும் குணப்படுத்துகிறது.

குளுட்டன் இல்லாதது

இதில் இயற்கையில் குளுட்டன் இல்லை. குளுட்டன் அழற்சி உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வு. பிரவுன் அரிசி அதிகளவிலான நார்ச்சத்து நிறைந்தது. இது செரிமானத்துக்கு உதவுகிறது. குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இவை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானவை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்