Benefits of Raw Jack Fruit : பலாப்பழத்தின் பிஞ்சில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா? அதை சமைக்க பயன்படுத்த முடியுமா?
Benefits of Raw Jack Fruit : பலாப்பழத்தின் பிஞ்சில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா? அதை சமைக்க பயன்படுத்த முடியுமா? இவைகுறித்து கீழே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.
பலாப்பழத்தின் பிஞ்சை சமைத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். கோடை மற்றும் குளிர் காலத்தில் கிடைக்கும் பலாப்பழங்களினால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இதில் எண்ணற்ற வகைகள் உள்ளது. மேலும் அளவுகளும் வேறுபடும். இதை பிஞ்சு பருவத்திலே சமைத்தும் சாப்பிடலாம். பழுத்தமும் பழமாக சாப்பிடலாம். குறிப்பாக பலாப்பிஞ்சு கறி, சைவ பிரியர்களுக்கு அதிக புரதச்சத்துக்களைக் கொடுக்கிறது. விதைகளைச் சுற்றியுள்ள சதைப்பகுதியை பச்சையாக சாப்பிடும்போது அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இதன் கிரீமி வெண்மை நிறம், சுவை, மணம் என அனைத்தும் உங்களைக்கவரும் வகையில் இருக்கும்.
பழுக்காத பலாப்பிஞ்சில் இருந்து பிரியாணி முதல் கிரேவி வரை எண்ணற்ற கார வகை டிஷ்கள் சமைக்கலாம். இதன் காய் 3 அடி உயரம் மற்றும் 20 இன்ச் அகலம் வரை வளரும் தன்மைகொண்து. இதனால் உலகிலேயே பெரிய பழம் கொடுக்கும் மரமாகப் பார்க்கப்படுகிறது. இதன் எனடை 110 பவுண்ட் வரை இருக்கும். இந்தியாவில் கிடைத்த பழம் தற்போது பல்வேறு நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து, ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கிறது இந்த முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம்.
சுவை
பழாப்பழத்தின் பிஞ்சை வைத்து, கார உணவுகளை தயாரிக்க முடியும். டோஃபுவுக்கு பதிலாகவும், கொண்டைக்கடலைக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். சைவ குருமாக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்
ஆப்பிள், அவகேடோக்களைப்போல் பலாப்பழத்திலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்தது. பலாவில் பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், ரிபோஃப்ளாவின் மற்றும் ஃபோலோட் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. பலாப்பழத்தின் சுளைகள் மஞ்சள் நிறம் கொண்டது, இது கரோட்டினாய்ட் என்று அழைப்படுகிறது. வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. கரோட்டினாய்ட்களைப் போன்ற மற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், செல்களின் சேதத்தை தடுக்கிறது. மனநிலையை மாற்றுகிறது. புற்றுநோய், இதயநோய், வயோதிகம் தொடர்பான கண் நோய்கள் மற்றும் கண்புரை நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
இதன் பழம், பிஞ்சு, விதைகள் என அனைத்து பாகங்களும் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் சதைகள் மற்றும் விதைகளில் கிரேவிகள் செய்யபடுகிறது. கொட்டையை வறுத்து அல்லது ஊறுவைத்து வடை உள்ளிட்ட ஸ்னாக்ஸ் ரெசிபிக்கள் செய்யமுடியும். இறைச்சியுடன் சேர்த்து கூடுதல் சுவைக்காக சமைக்கப்படுகிறது. பலாப்பழத்தில் பாயாசம், அல்வா, பிரதமன் உள்ளிட்ட இனிப்பு வகைகள் செய்யப்படுகிறது. உலகில் பல்வேறு நாட்டு உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.
பலாப்பிஞ்சில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்
உடல் எடை குறைப்பு
பலாப்பிஞ்சுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள அதிகம் உள்ள தண்ணீர் மற்றும் நார்ச்சத்துக்கள் பலாப்பழத்தை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கின்றன. அரிசி அல்லது ரொட்டி சாப்பிட்ட அளவுக்கு வயிறை நிறைக்கும் தன்மைகொண்டது. இதனால் உங்களுக்கு பசி ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது.
நீரிழவு நோய்க்கு மருந்து
பலாப்பிஞ்சு நீரிழிவு நோய்க்கு மருந்தாகிறது. ஆனால் பழத்தை சாப்பிடக்கூடாது. கோதுமை மற்றும் அரிசியைவிட குறைவான குளுக்கோஸ் அளவு இந்த பிஞ்சில் உள்ளது. இதனால் அரிசி சாதம் மற்றும் ரொட்டிகளுக்கு பதில் பலாப்பிஞ்சை பயன்படுத்தினால், அது ரத்த சர்க்கரையில் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறியுள்ளன.
புரதம்
பலாப்பிஞ்சில் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. முட்டை மற்றும் கறியில் உள்ள புரதச்சத்தைவிட அதிகம். எனவே சைவ பிரியர்களுக்கு இது மிகவும் சிறந்தது.
கலோரிகள் குறைவு
பலாப்பிஞ்சில் கலோரிகள் குறைவாக உள்ளது. உருளை, பீட்ரூட் மற்றும் தானியங்கள் போன்ற மற்றவற்றைவிட இந்த காய் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைதருகிறது. எனவே இந்தக்காயை நீங்கள் உடல் எடையை அதிகரித்துக்கொள்ளாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி சத்துக்கள் பலாப்பிஞ்சில் அதிகம் உள்ளது. இது நோய்களை விரட்டி, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்களுக்கு வீக்கம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆர்த்ரிட்டிஸ், வாயுத்தொல்லைகள் ஏற்படாமல் காக்கிறது.
இதயத்துக்கு இதம்
பலாப்பழத்தில் உங்கள் தமனிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உட்பொருட்கள் உள்ளன. இது உங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். உங்களின் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும்.
இறைச்சி உணவுகளுக்கு சிறந்த மாற்று
பலாப்பிஞ்சில் பிரியாணி, கிரேவிகள் செய்யப்படுகிறது. இதனால் உங்கள் உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் கறி சாப்பிட முடியாதவர்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்கிறது. இது சைவ பிரியர்களுக்கு சிறந்தது. இந்த பழம் மற்றும் பிஞ்சின் நற்குணங்கள் பலாக்கொட்டையிலும் உள்ளது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்