Benefits of Pumpkin Seeds : தினமும் ஒரு ஸ்பூன் பரங்கிக்காய் விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
Benefits of Pumpkin Seeds : தினமும் ஒரு ஸ்பூன் பரங்கிக்காய் விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பரங்கி விதைகளை சாப்பிட்டு பாருங்கள் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்று?
பரங்கிக்காய் விதைகளை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பரங்கிக்காய் விதைகள், பெப்பிடாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது சிறியதாக இருந்தாலும் ஆற்றல் நிறைந்தது. தினமும் ஒரே ஒரு ஸ்பூன் பரங்கிக்காய் விதைகளை சாப்பிடுவதால், உங்களுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. உங்கள் அன்றாட உணவில் பரங்கிக்காயின் விதைகளை சேர்த்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது பாருங்கள்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
பரங்கிக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மெக்னீசியம், சிங்க், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இவை உடலில் பல்வேறு முக்கிய வேலைகளை செய்கின்றன. இவை எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கின்றன.