Benefits of Pumpkin Seeds : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பரங்கிவிதைகள்! தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட என்னவாகிறது?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Pumpkin Seeds : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பரங்கிவிதைகள்! தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட என்னவாகிறது?

Benefits of Pumpkin Seeds : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பரங்கிவிதைகள்! தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட என்னவாகிறது?

Priyadarshini R HT Tamil
Published Oct 04, 2024 11:03 AM IST

Benefits of Pumpkin Seeds : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பரங்கிவிதைகள்! தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட உங்கள் உடலில் என்னவாகிறது பாருங்கள்.

Benefits of Pumpkin Seeds : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பரங்கிவிதைகள்! தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட என்னவாகிறது?
Benefits of Pumpkin Seeds : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பரங்கிவிதைகள்! தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட என்னவாகிறது?

இதயத்துக்கு நல்லது

பரங்கிக்காயின் விதைகளில் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. அது உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. மெக்னீசியச்சத்துக்கள் அதிகம் உள்ள பரங்கிக்காயை உங்கள் உணவில் அதிகளவில் சேர்த்துக்கொண்டால் அது உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கிறது. இது உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

கொழுப்பு

பரங்கிக்காய் விதைகளை தாவர அடிப்படையிலான ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் இதயத்தையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

ப்ராஸ்டேட் ஆரோக்கியம்

பரங்க்காய் விதைகளில் சிங்க் சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் ப்ராஸ்டேட் சீராக இயங்க மிகவும் முக்கியமானது. பரங்கிக்காயின் விதைகள் உங்களுக்கு ப்ராஸ்டேட் ஹைப்பர் பிளாசியா ஏற்படும் அறிகுறிகளைப் போக்குகிறது இந்த நிலை ஏற்பட்டால் ஆண்களின் ப்ராஸ்டேட் பெரிதாகி சிறுநீர் கழிப்பதில் கோளாறுகள் ஏற்படும்.

நோய் எதிர்ப்பாற்றல்

பரங்கிக்காயின் விதைகளில் வைட்டமின் இ சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சிங்க் ஆகியவை உள்ளன. இது உங்கள் உடல் தொற்றுக்களை எதிர்த்து போராடுவதற்கும், உங்கள் உடலை ஃப்ரி ராடிக்கல்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

பளபளக்கும் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம்

உங்களுக்கு பளபளக்கும் சருமமும், வலுவான கூந்தலும் வேண்டும் என்றால், அதற்கு பரங்கிக்காயின் விதையில் உள்ள சிங்க் மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் உதவும். பரங்கிக்காயின் விதைகள் உங்கள் சருமத்தை சரிசெய்து, புத்துணர்வு தரும் தன்மைகொண்டது. இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. உங்களுக்கு பளபளக்கும் மற்றும் ஆரோக்கியமான மிளரும் சருமம் வேண்டுமெனில் நீங்கள் தினமும் உணவில் பரங்கிக்காயின் விதைகளை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

எலும்பு ஆரோக்கியம்

பரங்கி விதைகளில் உள்ள மெக்னீசியச்சத்துக்கள், உங்களின் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பு அடர்த்தி மற்றும் வலுப்பெற உதவுகிறது. உண்மையில், இந்த சிறிய விதைகள் உங்கள் அன்றாட தேவையில் 40 சதவீத எலும்பு ஆரோக்கியத்தை பூர்த்தி செய்யும் ஆற்றல் கொண்டது.

ரத்த சர்க்கரை அளவுகளை சமப்படுத்துகிறது

ரத்த அழுத்தம் யாருக்கெல்லாம் திடீரென உயர்கிறதோ அவர்களுக்கு இந்த விதைகள் மிகவும் பயனளிக்கக்கூடியவையாகும். இந்த விதைகளில் உள்ள புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்பு இரண்டும் சேர்ந்து உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகின்றன. இது உங்கள் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

குடல் ஆரோக்கியம்

பரங்கிக்காயின் விதைகளை அன்றாடம் உணவில் சேர்க்கும்போது அது உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உங்களுக்க எளிதாக செரிமானம் நடைபெற உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு தேவையான ப்ரீபயோடிக்குகளையும், உங்கள் குடலுக்கு தேவையான பாக்டீரியாக்களையும் வழங்குகின்றன. இது உங்கள் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.