Benefits of Pumpkin : நோய் எதிர்ப்பு முதல் உடலின் நச்சுக்களை நீக்குவது வரை, வெண் பரங்கியின் 12 நன்மைகள் இதுதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Pumpkin : நோய் எதிர்ப்பு முதல் உடலின் நச்சுக்களை நீக்குவது வரை, வெண் பரங்கியின் 12 நன்மைகள் இதுதான்!

Benefits of Pumpkin : நோய் எதிர்ப்பு முதல் உடலின் நச்சுக்களை நீக்குவது வரை, வெண் பரங்கியின் 12 நன்மைகள் இதுதான்!

Priyadarshini R HT Tamil
Published Sep 22, 2023 03:00 PM IST

Benefits of White Pumpkin : பரங்கிக்காய், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் உள்ளது. இது ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள். இது சிறிது இனிப்புச்சுவை நிறைந்த பழம். ஆரஞ்சு நிற பழத்தை விட வெள்ளை நிற பழம் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் அளிப்பது.

இத்தனை நன்மைகள் அடங்கியதா வெள்ளை பரங்கிக்காய்
இத்தனை நன்மைகள் அடங்கியதா வெள்ளை பரங்கிக்காய்

ஊட்டச்சத்துக்கள் அதிகம்

வெள்ளை பூசணியில் கலோரிகள் குறைவாக உள்ளது. தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் (பி1, பி2, பி3, பி5, பி6 மற்றும் பி9) மேலும் கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன.

உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்திருக்க உதவுகிறது

இதில் அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. அது உங்கள் உடலை நீர்ச்சத்துடன் பராமரிக்கிறது. உடலின் ஜீரணம், ரத்த ஓட்டம், வெப்பம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களுக்கு நீர்ச்சத்து தேவை.

உணவு ஜீரணிக்க உதவுகிறது

பூசணிக்காயில் உள்ள நார்ச்சத்து நீங்கள் உட்கொள்ளும் உணவு செரிக்க உதவுகிறது. மேலும் வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்கிறது. மலச்சிக்கலை தடுக்கிறது. வயிற்றில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளர்வதற்கு உதவுகிறது. இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், ஜீரணத்துக்கும் உதவுகிறது.

எடை மேலாண்மையில் உதவுகிறது

இதில் உள்ள அதிக தண்ணீர், நார்ச்சத்து, குறைவான கலோரிகள் உங்களின் உடல் எடையை சரியாக பராமரிக்க உதவுகிறது. கொஞ்சம் கலோரிகள் உட்கொண்ட உடனே வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது.

நீரிழிவு நோயை சரிபடுத்துகிறது

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க வெள்ளை பரங்கிக்காய்கள் உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வெண் பரங்கிக்காயில் உள்ள பொட்டாசியம், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. உணவில் கூடுதலா சோடியம் இருப்பதை கவனித்துக்கொள்கிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. வைட்டமின் சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்கள் சேதம் அடைவதை தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சரும ஆரோக்கியத்துக்கு சிறந்தது

இதில் உள்ள வைட்டமின் சி சத்து, சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. அது கொலஜன் அதிகரிக்க உதவி, சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சருமத்தை பாதுகாக்க உதவி, மனஅழுத்தத்தை குறைக்கிறது.

வீக்கத்துக்கு எதிரானவற்றை கொண்டுள்ளது

இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்டுகள் மற்றும் ஃபினோலிக் காம்பவுண்ட்களில் வீக்கத்துக்கு எதிரானவை. இவை உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

உடல் சூட்டை தணிக்க உதவுகிறது

பாரம்பரிய மருத்துவத்தில் உடல் சூட்டை தணிக்க பரங்கிக்காய் உதவுகிறது. வெயிலால் ஏற்படும் ஹீட் ஸ்ரோக்குகள் ஏற்படாமல் தடுக்க பரங்கிக்காய்கள் உதவுகிறது. மேலும் உடலில் அதிகம் இருக்கும் சூட்டை தணிக்கிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

வெள்ளை பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதில் கரோடினாய்ட்கள் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நாட்பட்ட நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. குறிப்பாக புற்றுநோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

நச்சுகளை நீக்குகிறது

இதில் உள்ள தண்ணீர் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. வெள்ளை பரங்கிக்காய், சிறுநீரை அதிகரித்து அதன் வழியாக உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.