தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Proso Millet One Grain A Day What Are The Benefits Of Snowmelt From Obesity To Diabetes

Benefits of Proso Millet : தினம் ஒரு தானியம்! உடல் பருமன் முதல் நீரிழிவு வரை பலன் தரும் பனிவரகின் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Jan 13, 2024 06:30 AM IST

Benefits of Proso Millet : இது உணவு மட்டுமல்ல, எண்ணிலடங்கா நற்குணங்களை கொண்டது. இதன் ஊட்டச்சத்துக்கள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு சிறந்தது. அதன் சில ஆரோக்கியத்தை இங்கு காணலாம்.

Benefits of Proso Millet : தினம் ஒரு தானியம்! உடல் பருமன் முதல் நீரிழிவு வரை பலன் தரும் பனிவரகின் நன்மைகள் என்ன?
Benefits of Proso Millet : தினம் ஒரு தானியம்! உடல் பருமன் முதல் நீரிழிவு வரை பலன் தரும் பனிவரகின் நன்மைகள் என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

பனிவரகின் நன்மைகள்

இதய ஆரோக்கியத்தை சீராக்க உதவுகிறது

பனிவரகில் மெக்னீசியச்சத்து உள்ளது. இது ரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது. பக்கவாதம் வரும் ஆபத்தை குறைக்கிறது. தமனி தடிப்பதையும் குறைக்கிறது.

இதில் உள்ள பொட்டாசியச்சத்து ரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி இருதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இதில் உள்ள லிகினன்கள், செரிமான நுண்ணுயிர்கள் மூலம் விலங்கு லிகினன்களாக மாறி இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

கொழுப்பு அளவை சீராக்க உதவுகிறது

இதய ஆரோக்கியத்துக்கு உடலில் கொழுப்பு சீராக பராமரிக்கப்படுவது மிகவும் அவசியம். பனிவரகில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது, அது கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது.

நீரிழிவு நோயை தடுக்கிறது

பனிவரகு, வளரும் நாடுகளின் சிறந்த உணவு. பெரும்பாலானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள மெக்னீசியச்சத்து அதற்கு உதவுகிறது. உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்க மெக்னீசியச்சத்து மிகவும் முக்கியமானது.

செரிமானத்துக்கு உதவுகிறது

நார்ச்சத்து அதிகம் நிறைந்த பொருட்கள் உடலில் வயிறு ஆரோக்கியத்தை உதவுகிறது. வயிறு உப்புசம், மலச்சிக்கல், வலி, வாயித்தொல்லை போன்றவற்றை தடுக்கிறது. செரிமான மண்டலத்தை சீரமைப்பதன் மூலம் குடல் புற்றுநோய் மற்றும் அல்சர் ஏற்படாமல் தடுக்கிறது. கழிவு நீக்கம் மற்றும் ஜீரணம் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நோய் எதிர்ப்புக்கும் உதவுகிறது.

புற்றுநோயை தடுக்கிறது

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எற்படுவதை தடுக்கிறது. பனிவரகு எடுத்துவரும் பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் வரும் வாய்ப்பை 50 சதவீதம் குறைக்கிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் என்பது பொதுவாக ஏற்படும் ஒன்றாகும்.

கழிவு நீக்க உதவுகிறது

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள குர்குமின், குயிர்சிடின், எலாஜிக் அமிலம் மற்றும் கேட்சின்ஸ் ஆகியவை ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. அது அந்த உறுப்புகள் சிறப்பாக கழிவு நீக்கம் செய்ய உதவுகிறது.

சுவாச மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது

பனிவரகு, ஆஸ்துமாவை தடுக்கிறது. இதை அடிக்கடி எடுத்துக்கொண்டால், ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவற்றை தடுக்கிறது.

வயோதிகத்தை தாமதமாக்குகிறது

சிறுதானியங்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. செல் பாதிப்பு, சோர்வு ஆகியவற்றை தடுக்கிறது. சுருக்கம், நிறமிழப்பு ஆகியவற்றை தடுக்கிறது. இதை தினமும் உட்கொள்வது வயோதிகத்தை தாமதமாக்குகிறது.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

பனிவரகில், கால்சியச்சத்து நிறைந்துள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு தேவையான கால்சியச்சத்தை வழங்குகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்