தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Poppy Seeds : ஹீமோகுளோபினை அதிகரிக்கும்; பாலியல் உணர்வை உயர்த்தும்; தைராய்டை போக்கும்; எது தெரியுமா?

Benefits of Poppy Seeds : ஹீமோகுளோபினை அதிகரிக்கும்; பாலியல் உணர்வை உயர்த்தும்; தைராய்டை போக்கும்; எது தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jun 21, 2024 05:00 AM IST

Benefits of Poppy Seeds : ஹீமோகுளோபினை அதிகரிக்கும்; பாலியல் உணர்வை உயர்த்தும்; தைராய்டை போக்கும் கசகசாவில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Poppy Seeds : ஹீமோகுளோபினை அதிகரிக்கும்; பாலியல் உணர்வை உயர்த்தும்; தைராய்டை போக்கும்; எது தெரியுமா?
Benefits of Poppy Seeds : ஹீமோகுளோபினை அதிகரிக்கும்; பாலியல் உணர்வை உயர்த்தும்; தைராய்டை போக்கும்; எது தெரியுமா?

100 கிராம் கசகசாவில், 525 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட்கள் 28.13 கிராம், நார்ச்சத்துக்கள் 19.5 கிராம், கொழுப்பு 41.56 கிராம், புரதம் 21.22 கிராம், தினசரி தேவையில் தியாமின் 74 சதவீதம், ஃபோலேட் 21 சதவீதம், வைட்டமின் பி6 19 சதவீதம், வைட்டமின் ஈ 12 சதவீதம், சோலைன் 11 சதவீதம், ரிபோஃப்ளாவின் 8 சதவீதம், கால்சியம் 144 சதவீதம், பாஸ்பரஸ் 124 சதவீதம், மாங்கனீஸ் 109 சதவீதம், மெக்னீசியம் 98 சதவீதம், இரும்புச்சத்துக்கள் 75 சதவீதமும் உள்ளது.

கசகசாவில் உள்ள நன்மைகள்

கசகசா கருவுறும் திறனை அதிகரிக்கிறது

பெண்களுக்கு கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கச்செய்கிறது. கசகசா ஃபெல்லோபியன் குழாயில் உள்ள சளியை போக்குகிறது. இது பாலியல் எண்ணத்தை அதிகரித்து, பாலியர் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். உங்கள் பாலியர் உணர்ச்சிகளைத் தூண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

உறக்கமின்மை நோயை எதிர்த்து போராடுகிறது

உறக்கத்தை மேம்படுத்துவதில் கசகசா முக்கிய பங்கு வகிக்கிறது. இது மனதை அமைதிப்படுத்தி, இந்த விதைகள் மனஅழுத்தத்தை குறைக்கிறது. இதில் டீ தயாரித்து பருகலாம் அல்லது அரைத்து பாலில் கலந்து பருகலாம். இதன்மூலம் உங்களுக்கு நல்ல உறக்கம் வரும்.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கசகசாவில் உள்ள காப்பர் மற்றும் கால்சியம் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள மாங்கனீஸ் புரத கொலாஜென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது, இது எலும்பை சேதமடையாமல் காக்கிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

கசகசாவில் எண்ணற்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரித்து மலச்சிக்கலை நன்றாக சரிசெய்கிறது.

இதய நோயை மேம்படுத்துகிறது

கசகசாவில் உள்ள எண்ணற்ற நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. உடலில் நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கிறது. கசகாவில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் உள்ளது. 

அது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைக்கிறது. கசகசாவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அது இதய நோய்களை காக்கிறது.

வாய் அல்சரை குணப்படுத்துவதும் வல்லமை பெற்றது

இதில் உடலுக்கு குளுமை அளிக்கும் உட்பொருட்கள் உள்ளது. இதனால் வாய் அல்சரை குணப்படுத்துகிறது.

ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது

கசகசாவில் ஒலியிக் ஆசிட் உள்ளது. அது ரத்த அழுத்த அளவைப் குறைக்கிறது.

கண்களுக்கு நல்லது

கசகசாவில் உள்ள சிங்க் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்களை காத்து, ஆரோக்கியமான பார்வையைக் கொடுக்கிறது.

நினைவாற்றலை அதிகரிக்கிறது

கசகசாவில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தை சுத்திகரிக்கிறது. உடலில் ஹீமோகுளோபின் அளலை அதிகரிக்கிறது. கசகசாவை உட்கொண்டால், அது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை அதிகரிக்கிறது. மூளைக்கும் ஆக்ஸிஜனை தருகிறது. இது நரம்பியல் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. மூளையின் நினைவாற்றல் திறனை அதிகரிக்கிறது.

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்கிறது

கசகசாவில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் உள்ள கற்களை தடுக்கிறது. அது மீண்டும் வராமல் பாதுகாக்கிறது.

தைராய்டு பிரச்னைகளுக்கு நல்லது

தைராய்ட் சுரப்பிகளுக்கு சிங்க் முக்கியமானது. கசகசாவில் உள்ள அதிகளவிலான சிங்க் சத்துக்கள், தைராய்ட் சுரப்பி நன்றாக சுரக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது

கசகசா நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இதில் உள்ள மாங்கனீஸ் நோயாளிகளுக்கு நல்லது.

வலியைக் குறைக்கிறது

பல காலங்களாக கசகசா வலியைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் கசகசா வலியைப் போக்கி நோயாளிகளுக்கு நன்மை தருகிறது. கசகசா தேநீர் வலியைப் போக்கும். இதில் வலியைப் போக்கும் திறன் அதிகம் உள்ளது.

பொடுகை கட்டுப்படுத்த உதவுகிறது

வெள்ளை மிளகுடன், கசகசாவை அரைத்து தயிருடன் கலந்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசினால், பொடுகை ஒழிக்கும்.

மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

கசகசாவில் உள்ள ஓப்பியம் ஆல்கலாய்ட்களில் உடலுக்கு சில நன்மைகளைத் தருகிறது. இது நரம்பை அமைதிப்படுத்தி, வலி நிவாரணியாகிறது. கசகசா விதைகள் கலந்த பாலை பருகும்போது, அது உங்கள் உடலில் கார்டிசால் அளவைக் குறைத்து, மனஅழுத்த அளவைக் குறைக்கிறது.

டாபிக்ஸ்