Benefits of Pomegranate Juice : மூளையை சுறுசுறுப்பாக்கும்; தொற்றை நீக்கி புற்றை தடுக்கும்; மாதுளை சாறின் மகிமைகள் என்ன?
Benefits of Pomegranate : மாதுளையின் பூக்கள், பழம், பட்டை என அனைத்தும் பல்வேறு பயன்படுகிறது. நாளொன்றுக்கு 250 மில்லி லிட்டர் பழச்சாறு பருகவேண்டும்.
மாதுளையின் பூக்கள், பழம், பட்டை என அனைத்தும் பல்வேறு பயன்படுகிறது. நாளொன்றுக்கு 250 மில்லி லிட்டர் பழச்சாறு பருகவேண்டும்.
மாதுளை பழச்சாறில் உள்ள நன்மைகள்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது பெண்களுக்கு எலும்புபுரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மாதவிடாய் வலிகளையும் போக்குகிறது. இதில் ஃபாலிபினால்கள், ஆந்தோசியானின்கள், இயற்கை அமிலங்கள், கேட்சின்கள், ஸ்டிரோல்கள் உள்ளது.
வீக்கத்தை குறைக்கிறது
ஆர்த்ரிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளை பழச்சாறு உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது
மாதுளை பழச்சாறு பருகுவது செரிமானத்தை அதிகரிக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
இதில் உள்ள ஆந்தோசியானின்கள் மற்றும் பனிகலாஜின்கள், வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சிவப்பு வைன் மற்றும் கிரீன் டீயைவிட அதிகம்.
உங்கள் மூளைக்கு நல்லது
உங்கள் உடல் நலம் சிறக்க மூளை நன்றாக இயங்கவேண்டும். மாதுளை பழச்சாறு மூளை சுறுசுறுப்புடன் இயங்க உதவுகிறது.
சருமத்துக்கு நல்லது
மாதுளைச்சாறு கொலஜென் உற்பத்திக்கு உதவுகிறது. புறஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை காக்கிறது. மாதுளையில் உள்ள பாலிஃபினால்கள் மற்றும் ஆந்தோசியானின்கள் சருமத்துக்கு நல்லது.
சிறுநீர் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
மாதுளையில் பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இது சிறுநீர் பாதை தொற்றுக்களில் இருந்து விடுதலை பெற உதவுகிறது. மாதுளை பழச்சா பருகுவது சிறுநீரக கற்கள் மற்றும் நீர்ச்சத்து குறைதல் போன்ற பிரச்னைகளை சரிசெய்கிறது.
புற்றுநோயை தடுக்கிறது
மாதுளை உட்கொள்வது ப்ராஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது. மாதுளை பழம், தோல், விதைகள் என அனைத்திலும் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதற்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம், மாதுளை பழங்கள் உங்கள் இதய நோய் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
ஆன்டிமைக்ரோபைல் உட்பொருட்கள் அடங்கியது
மாதுளையில் உள்ள டானின்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் எலாகிடானின்கள் போன்ற பயோஆக்டிவ் உட்பொருட்கள் ஆன்டிமைக்ரோபைல் திறன்கள் கொண்டது.
உடல் பருமனை குறைக்க உதவுகிறது
மாதுளை உட்கொள்வது உங்கள் வாழ்வியல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் உடல் எடை குறையும்.
ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது
மாதுளைச்சாறு உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது.
தொற்றுக்களை தடுக்க உதவுகிறது
மாதுளை பழச்சாறு அருந்துவது உடலில் தொற்றுக்களை தடுக்க உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் உட்பொருட்கள், அலர்ஜ் மற்றும் தொற்றுக்களை போக்குகிறது.
நீரிழிவு நோய்க்கு உதவுகிறது
மாதுளையில் உள்ள இயற்கை சர்க்கரை, உங்கள் உடலில நீரிழிவு நோயை முறைப்படுத்த உதவுகிறது.
உங்களுக்கு மாதுளை சாப்பிடுவது அலர்ஜி என்றால் அதை தவிர்த்தல் நலம்.
அலர்ஜி கொண்டவர்கள் மாதுளை பழச்சாறு எடுத்தால்
அரிப்பு
வீக்கம்
சளி
மூச்சுத்திணறல்
வயிற்றுப்போக்கு
அனாஃபிலாக்ஸிஸ் எனப்படும் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பிரச்னை கூட ஏற்படும்.
டாபிக்ஸ்