Benefits of Pineapple : வெளியே சொரசொரப்பு, உள்ளே இனிப்பு! இருமல் மருந்து முதல் புற்றுநோய் வரை குணமளிக்கும் அன்னாசி பழம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Pineapple : வெளியே சொரசொரப்பு, உள்ளே இனிப்பு! இருமல் மருந்து முதல் புற்றுநோய் வரை குணமளிக்கும் அன்னாசி பழம்!

Benefits of Pineapple : வெளியே சொரசொரப்பு, உள்ளே இனிப்பு! இருமல் மருந்து முதல் புற்றுநோய் வரை குணமளிக்கும் அன்னாசி பழம்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 03, 2024 02:48 PM IST

Benefits of Pineapple : வெளியே சொரசொரப்பு, உள்ளே இனிப்பு என இருமல் மருந்து முதல் புற்றுநோய் வரை குணமளிக்கும் வரை அன்னாசி பழத்தின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Pineapple : வெளியே சொரசொரப்பு, உள்ளே இனிப்பு! இருமல் மருந்து முதல் புற்றுநோய் வரை குணமளிக்கும் அன்னாசி பழம்!
Benefits of Pineapple : வெளியே சொரசொரப்பு, உள்ளே இனிப்பு! இருமல் மருந்து முதல் புற்றுநோய் வரை குணமளிக்கும் அன்னாசி பழம்!

அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்

அன்னாசி பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. 

ஒரு கப் அன்னாசிப்பழத்தில், உங்கள் உடலின் தினசரி தேவைக்கான வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனீஸ், காப்பர், தியாமின், ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், இரும்புச்சத்துக்கள், ரிபோஃப்ளேவின், புரதம், போன்டோதெனிக் அமிலம் ஆகியவை உள்ளது. 

இதில் 82.5 கலோரிகள் உள்ளது. இதில் வைட்டமின் ஏ, கே, சிங்க், கால்சியம் மற்றும் ஃபோட்டோஃபோபியா ஆகியவையும் உள்ளது.

இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மட்டுமல்ல, இவற்றில் ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இதில் செரிமான எண்சைம்களும் உள்ளது. இதனால் அன்னாசி பழங்கள் செரிமானத்துக்கு ஏற்ற சிறந்த உணவு.

ஆர்த்ரிட்டிஸ்க்கு உதவுகிறது

பல வகை ஆர்த்ரிட்டிஸ்கள் உள்ளது. இது மூட்டுகளில் வீக்கத்தை குறைக்கிறது. அன்னாசி பழத்தில் ப்ரோமலைன் உள்ளது. இதில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. ப்ரோமலைன் ஆர்த்ரடிஸ் அறிகுறிகளை போக்கும் தன்மைகொண்டது என்பது ஆய்வுகளில் நிரூகப்பட்டுள்ளது. இது ஆர்த்ரிட்டிஸ் அறிகுறிகளை போக்கும் தன்மை கொண்டது.

புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது

அன்னாசி பழங்களை நாம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்துக்களைப் போக்குகிறது. அன்னாசிப்பழம் மற்றும் அதில் உள்ள உட்பொருட்கள், புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இது உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இந்தப்பழம் செய்யும் மாயங்கள் அதிகம். இந்தப்பழம் பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. அன்னாசிபழமே சாப்பிடாதவர்களுக்கும், அன்னாசிப்பழம் அதிகம் சாப்பிட்டவர்களுக்கும், மிதமான அளவு சாப்பிட்டவர்களுக்கும் இடையே ஆய்வுகள் செய்யப்பட்டது.

அதில் அன்னாசி பழத்தை சாப்பிடுவதற்கும், உடல் உபாதைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வழக்கமாக உணவில் அன்னாசி பழத்தை சேர்த்துக்கொள்பவர்களுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகள் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அன்னாசி பழங்கள் சாப்பிட்டவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைத்தது தெரியவந்தது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அவர்களுக்கு அதிகரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இருமலைப் போக்குகிறது

உங்களுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டால், இருமல் மருந்துக்கு பதில், அன்னாசி பழத்தையோ அல்லது அதன் சாறையே எடுத்துக்கொள்ள வேண்டும். இது சளியை குழைத்து இருமலின் வழியே வெளியேற்றுகிறது. எனவே இருமல் இருந்தால், உறக்கத்தை ஏற்படுத்தும் உட்பொருட்கள் கொண்ட, மருந்துகளைப் பயன்படுத்தாமல், அன்னாசிபழத்தை எடுத்துக்கொண்டு பயன்பெறுங்கள்.

சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம்

இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், அன்னாசி பழங்கள் உங்கள் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. இந்தப்பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் தலைமுடியை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மற்றும் புரோமெலைன் எண்சைம்கள் உங்கள் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முகப்பருக்களை போக்க உதவுகிறது.