Benefits of Pear : பேரிக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Pear : பேரிக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பாருங்க!

Benefits of Pear : பேரிக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Sep 20, 2024 10:48 AM IST

Benefits of Pear : பேரிக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Pear : பேரிக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பாருங்க!
Benefits of Pear : பேரிக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பாருங்க!

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

பேரிக்காயில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. கரையாத நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

பேரிக்காயில் உள்ள உயர்தர நார்ச்சத்துக்கள், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. பேரிக்காய்கள் கொழுப்பை குறைக்கவும், ஆரோக்கியமான ரத்த ஓட்டத்துக்கும் உதவுகிறது. இதனால் உங்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

குடல் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு

இதில் உள்ள ப்ரீபயோடிக் நார்ச்சத்துக்கள், குமலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணுயிர்களை உருவாக்கி பாதுகாத்து, குடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இதனால் செரிமான மண்டலம் மேப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் சீராகிறது. உடலில் எடை முறையாகப் பராமரிக்கப்படுகிறது.

உடல் எடை மேலாண்மை

பேரிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் உட்பொருட்கள், நமக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகின்றன. இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் உங்கள் உடல் எடை மற்றும் ஒட்டுமொத்த பசி என அனைத்துக்கும் நன்மைகள் கிடைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

பேரிக்காயில் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது உங்கள் செல்களுக்கு ஃப்ரி ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது. நாள்பட்ட நோய்களான புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

செரிமான ஆரோக்கியம்

பேரிக்காயில் சார்பிடால்கள் உள்ளது. இது உடலில் இயற்கை மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலைப்போக்க உதவுகிறது. இது உங்கள் குடல் இயங்கும் தன்மையை முறைப்படுத்துகிறது. இதனால் உங்கள் வயிற்றின் பொதுவான ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

கண் ஆரேக்கிய பாதுகாப்பு

பேரிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால் வயோதிகத்தால் உங்கள் கண்களில் ஏற்படும் கண்புரை நோய்கள் மற்றும் பல்வேறு கண் நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எனவே உங்கள் உணவில் கட்டாயம் பேரிக்காய்களை சேர்த்துக்கொள்வது உங்கள் கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்கள் கண்களை பாதுகாக்க உதவும்.

சரும ஆரோக்கியம்

பேரிக்காயில் முறையான அளவு வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் சருமத்துக்கு தேவையான கொலாஜென் உற்பத்திக்கு உதவும். இதன் மூலம் உங்களின் சருமு ஆரோக்கியம் மேம்படும். எனவே நீங்கள் பேரிக்காய்களை சாப்பிடுவது உங்கள் சருமப் பொலிவை அதிகரிக்கச் செய்யும். இது உங்களின் வயோதிக தோற்றத்தை குறைக்க உதவும்.

பொறுப்பு துறப்பு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவையாகும். இது உங்களுக்கு ஒரு துணை மட்டுமே. தரமான உங்கள் மருத்துவரின் பரிந்துரையால் வழங்கப்படுவதைவிட துல்லியமானது என்று நாங்கள் கூறமாட்டோம். எப்போதும் மேலதிக விவரங்களுக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.