Benefits of Papaya : இந்த ஒரு பழம் போதும்! குளிர் காலத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்!
Benefits of Papaya : இந்த ஒரு பழம் போதும்! குளிர் காலத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பராமரிக்கப்படும்!
கண் ஆரோக்கியத்துக்கு நல்லது
இந்தப்பழத்தில் அதிகளவில் பீட்டா கரோட்டின் உள்ளது. இதை பயன்படுத்தி உடல் வைட்டமின் ஏயை தயாரிக்கிறது. இது கண் ஆரோக்கியத்துக்கு நல்லது. வயது தொடர்பான செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. இதனால் நீங்கள் வைட்டமின் ஏயை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பப்பாளியின் நன்மைகள்
பப்பாளி, ஆண்டு முழுவதும் கிடைத்தாலும், இந்தியாவில் இது பருவக்கால பழங்களுள் ஒன்று. குறிப்பாக குளிர் காலங்களில் அதிகம் கிடைக்கும். ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. பப்பாளிப்பழம் உள்ளிட்ட பழங்களை சாப்பிடுவதால், உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது
வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நோய் எதிர்ப்பாற்றலை பலப்படுத்த உதவுகிறது. இது சருமத்தை பளபளபாக்குகிறது. வைட்டமின் சி சத்து பப்பாளியில் நிறைந்துள்ளன.
செரிமானத்துக்கு சிறந்தது
பப்பாளியில் உள்ள பாப்பின் என்ற எண்சைம்கள், புரதங்களை உடைத்து செரிமானத்துக்கு உதவுகிறது. இது வயிறு மற்றும் கல்லீரல் பிரச்னைகள் உள்ளவர்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
நார்ச்சத்து நிறைந்தது
பப்பாளியில் உள்ள நார்ச்சத்துக்கள், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.
அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள்
பப்பாளியில் உங்கள் உடலில் அழற்சி ஏற்படுவதை தடுக்கிறது. அழற்சியை தடுக்கு எண்சைம்கள் மற்றம் வேதிப்பொருட்கள் உள்ளன.
இதயத்துக்கு இதமானது
பப்பாளியில் உள்ள நார்ச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதனால் இதய ஆரோக்கியத்துக்கு சிறந்தது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
பப்பாளியில் கலோரிகள் குறைவாக உள்ளது மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையை பராமரிப்பதில் உதவுகிறது. இதன் அதிக நார்ச்சத்து அதற்கு உதவுகிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
பப்பாளியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்ப சக்தியை அதிகரிக்கிறது. உடல் தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது.
சரும பரராமரிப்பு
பாப்பின்கள் மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை ஆரோக்கிய சருமத்துக்கும், சரும பளபளப்புக்கும் உதவுகிறது. கூடுதலாக, பப்பாளியை பயன்படுத்தி நிறைய சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
வயோதிக தோற்றத்தை தாமதப்படுத்துகிறது
பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்டன்ட்கள், வயோதிக தோற்றத்தை தாமத்தப்படுத்துகிறது. உங்களை இளமையோடு வைத்துக்கொள்ள உதவுகிறது.
டாபிக்ஸ்