Benefits of Papad : சைட் டிஷ் அல்லது ஸ்னாக்ஸ் தான்! ஆனால் எத்தனை நன்மைகள் பாருங்கள் இந்த அப்பளத்தில்!
Benefits of Papad : சுப விருந்துகளின் ஹீரோ இந்த அப்பளம். அதன் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

திருமணம் அல்லது எந்த சுப நிகழ்ச்சி விருந்து என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அப்பளம், வடை, பாயாசம்தான். ஏனெனில், நாம் இவற்றை அடிக்கடி வீட்டில் செய்ய மாட்டோம்.
அதனால் விருந்தில் பாயாசத்தில் அப்பளத்தை நொறுக்கி சேர்த்து சாப்பிடுவது மகிழ்ச்சியானதும், சுவையான நிகழ்வாகவும் இருக்கும்.
ஆரோக்கியமான உணவுகள் என்றாலே அது காய்கறிகள், பழங்கள்தான் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமது எளிமையான உணவுகளிலும் ஆரோக்கியம் பொதிந்துள்ளது. எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவு என்பது அதிக விலை உள்ளதாகவோ அல்லது அதிக கவனம் பெற்றதாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
இதற்கு உதாரணம்தான் பழைய சாதம். மிகவும் எளிமையான உணவு. ஆனால் உடலுக்கு அத்தனை ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. அதுபோல் நாம் அடிக்கடி சாப்பிடும் அப்பளமும் ஆரோக்கியமான ஒன்றுதான். இது சைட் டிஷ் ஆகவும், ஸ்னாக்ஸ் இரண்டாகவும் உண்ணப்படும் ஒன்றாகும்.
பொரித்த அப்பளமோ அல்லது சுட்ட அப்பளமோ சாப்பாட்டுடன் பரிமாறப்படுகிறது. அது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது. அப்பளத்தின் நன்மைகளை தெரிந்துகொண்டு சாப்பிட்டு மகிழுங்கள்.
அப்பளம் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இதில் சோடியம் மற்றும் பொட்டாசியச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் மெக்னீசியம், இரும்பு மற்றும் கார்போஹைட்ரேட் சத்துக்களும் அதிகம் உள்ளன. இதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
அப்பளத்தின் நன்மைகள்
கலோரிகள் குறைந்த உணவு
அப்பளத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால், இது உடல் எடையை அதிகரிக்காது. அப்பளம் என்றாலே விருந்துதான் நியாபகத்துக்கு வரும்.
செரிமானத்தை தூண்டுகிறது
உங்களுக்கு செரிமான பிரச்னைகள் இருந்தால், அப்பளத்தை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலில் செரிமான எண்சைம்களை தூண்டி, செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும் வயிறு தொடர்பான மற்ற பிரச்னைகளை சரிசெய்வதுடன், குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது.
குளூட்டன் ஃப்ரி
புரதச்சத்துக்கள் நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடித்தது. ஆனால் இதை அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. இதை எண்ணெயில் பொரித்ததை சாப்பிடுவதைவிட சுட்டு சாப்பிடுவது நல்லது.
நார்ச்சத்துக்கள் நிறைந்தது
உங்கள் உடல் மற்றும் குடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் தேவையானது. எனவே நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை அன்றாடம் உட்கொள்ளுங்கள். அப்பளத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் குடல் இயங்குவதற்கு உதவும். இதனால் உங்கள் உடலை சரியான எடையில் பராமரிக்க அப்பளங்கள் உதவுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த ஸ்னாக்ஸ்
அப்பளம் ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். இதை நீங்கள் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். சோடியம் குறைவான உணவு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளவர்கள், கவனமாக இருக்கவேண்டும். இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதை முழு மதிய சாப்பாட்டுடன் சாப்பிடும்போது உங்களுக்கு நன்றாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்