Benefits of Paneer : பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை அழிக்கும்! பன்னீரில் இத்தனை நன்மைகளா?
Benefits of Paneer : பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களை அழிக்கும்! பன்னீரில் இத்தனை நன்மைகளா?
பன்னீரின் நன்மைகள்
100 கிராம் பன்னீரில் 20 கிராம் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
புற்றுநோய் இன்றைய காலத்தில் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு மத்தியில் சராசரியாக 10 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.
பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் எலும்பை பலப்படுத்த உதவுகிறது.
ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகளை பெறுவதற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பன்னீர் எடுத்துக்கொள்ளலாம். தசை மற்றும் நரம்பு மண்டலம் நன்றாக இயங்க கால்சியம் உதவுகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
பன்னீரில் ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. அது எளிதில் செரிமானமாகக்கூடியது. கொழுப்பு சேராமல் செரித்து, உடைந்து உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது என்று பொருள். உடல் பருமனுக்கு கொழுப்பு சேர்வதுதான் முதல் காரணம். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு பன்னீர் ஒரு நல்ல ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவாகும்.
செரிமான மண்டலத்தின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது
உடலில் செரிமான மண்டலம் முக்கிய பாகம் ஆகும். நாம் சாப்பிடும் உணவை உடைத்து, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. செரிமான மண்டலத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால், அது வழக்கமான இயக்கத்தை பாதிக்கும்.
பன்னீரில் அதிகளவில் மினரல்கள், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவை செரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது. பாஸ்பரஸ் மலமிளக்கியாக செயல்படுகிறது. பாஸ்பரஸ் செரிமானத்துக்கு உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலானோர், பால் பொருட்களை தள்ளி வைப்பார்கள். ஆனால் பன்னீரை அவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். பன்னீரில் மெக்னீசிய சத்து நிறைந்துள்ளது. அது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
இதில் குறைவான அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே இதை நீரிழிவு நோயாளிகளும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவில் ஏற்படும் திடீர் மாற்றங்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது
பன்னீர் வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. குறிப்பாக குழந்தைகளில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் தொடர்பான கோளாறுகள் பன்னீரை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை தூண்டுகிறது.
வலுவான நோய் எதிர்புப மண்டலத்தை கட்டமைக்க உதவுகிறது. பன்னீரில் உள்ள வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உட்பொருட்கள் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. இது குழந்தைகளின் நினைவாற்றல் திறனை அதிகரிக்கிறது மற்றும் அவர்களின் கவனிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.
பன்னீர் நோயிலிருந்து காப்பாற்றுகிறது
பன்னீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இது பக்கவாதம் வராமல் தடுக்கிறது. இது தசைகளில் வலி ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது.
மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் அடிக்கடி வலியால் பாதிக்கப்படுவார்கள். பன்னீரை தினமும் எடுத்துக்கொண்டால், அது வலிகளை குறைக்கிறது. இதில் உள்ள அதிகளவிலான கால்சியம், எலும்புகளை காக்கிறது. இதில் அதிகளவில் சிங்க் உள்ளது. அது ஆண்களின் ஸ்பெர்ம் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
டாபிக்ஸ்