கருப்பட்டி அல்லது பனைவெல்லத்தின் நன்மைகள்! யார், எப்படி பயன்படுத்தவேண்டும்? – மருத்துவர் விளக்கம்
கருப்பட்டி அல்லது பனைவெல்லத்தின் நன்மைகள் என்னவென்றும், அதை யார், எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும் விளக்குகிறார் மருத்துவர்.
கருப்பட்டி மருத்துவ குணங்கள் நிறைந்தது. உங்கள் உடலை சூடாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சளி மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அதன் மற்ற நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். பனைமரங்களில் இருந்து பெறப்படும் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவது இந்த பனைவெல்லம் அல்லது கருப்பட்டி என்பதாகும். இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் தேவையான ஊட்டச்சத்துககளைக் கொடுக்கிறது. இது இனிப்பு பண்டங்களின் சுவையை மட்டும் அதிகரிக்கவில்லை. செயற்கை உட்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கிறது. இதன் மற்ற நன்மைகளைப் பார்க்கலாம்.
கல்லீரலை சுத்திகரிக்கிறது
பனைவெல்லம் அல்லது கருப்பட்டி கல்லீரலை சுத்தம் செய்து உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இது உங்கள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், ரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு தேவையான நோய்எதிர்ப்பை வலுப்படுத்துகிறது.
செரிமான ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது
உங்கள் வயிற்றை பனைவெல்லம் சுத்தம் செய்கிறது. குடல் நல்ல முறையில் இயங்க உதவுகிறது. தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. உணவை உடல் சிறப்பான உறிஞ்ச உதவுகிறது. குடலில் உள்ள பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகளைப் போக்குகிறது.
ஒற்றை தலைவலிக்கு சிகிச்சையளிக்கிறது
ஒற்றைத் தலைவலியை குறைக்கிறது. நீங்கள் ஒற்றைத்தலைவலியால் அவதிப்பட்டு வந்தால், தினமும் சிறிது பனைவெல்லத்தை சாப்பிட அது உங்கள் ஒற்றைத் தலைவலியை குணமாக்கும்.
மாதவிடாய் வலிகளை குறைக்கிறது
மாதவிடாய் வலிகள் இருந்தாலும், நீங்கள் கருப்பட்டியை எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலில் எண்டோர்பின்ஃகளை வெளியிடச்செய்து, உங்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றம் மற்றும் மாதவிடாய் வலி ஆகியவற்றைப்போக்குகிறது.
உடல் எடை குறைப்பு
உங்கள் உடலில் தேவையின்றி தங்கும் தண்ணீரை வெளியேற்றுகிறது. தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி, எலக்ட்ரோலைட்களை சமப்படுத்தி, உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் நன்மை தரும்
கர்ப்ப பாலத்தில் உங்கள் உடலுக்குத் தேவையான இரும்பு மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. எனவே மிதமான அளவு எடுத்துக்கொள்ளலாம். இது கருவுக்கும், தாய்க்கும் நல்லது.
சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
இரும்பு மற்றும் மெக்னீசியச் சத்துக்களைக் கொடுக்கிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவடைவதுடன், முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
அனீமியாவைப் போக்குகிறது
பனைவெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் சதைக்கும் நல்லது. மேலும் இதயத்துடிப்பை முறைப்படுத்துகிறது.
ஆற்றலை அதிகரிக்கிறது
செரிமானத்தைத்தூண்டுகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் உங்களை நாள் முழுவதும் ஆற்றலுடன் இயங்க உதவுகின்றன.
மூட்டு வலிக்கு மருந்து
உங்களுக்கு மூட்டு வலி இருந்தால், பனைவெல்லம் அதைப் போக்குகிறது. இதில் உள்ள கால்சியத்தால், பனைவெல்லம் உங்கள் எலும்புகளை வலுப்படுத்தி, மூட்டு வலியைக் குறைக்கிறது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கருப்பட்டியை யார், எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.
கருப்பட்டியில் இனிப்பு சுவையுடன் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் இரும்பு சத்து, கால்சியம், விட்டமின் ஏ. பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளன. நாள்தோறும் ஒரு துண்டு கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீரான நிலையில் இருக்கும். பருவமடைந்த பெண்கள் உளுந்துடன் கருப்பட்டி சேர்த்து களியாக கிண்டி சாப்பிட்டால் இடுப்பு எலும்பு வலுப்படும். கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் கைத்குத்தலரிசியுடன் சிறிதளவு கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பிரச்னை குணமாகும். இளம் தாய்மார்கள், தாய்ப்பால் அதிகம் சுரக்க சுக்கு, மிளகு ஆகியவற்றை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். பாலுடன் கருப்பட்டி, மிளகுத்தூள், மஞ்சள் கலந்து சாப்பிட்டால் தொண்டை, வயிற்று புண் குணமாகும். வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.
வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் நமது உடலில் உள்ள வைட்டமின்களின் அளவு குறையலாம். ஆனால் கருப்பட்டி உங்களுக்கு தேவையான வைட்டமின்களை அள்ளி வழங்கும் ஆற்றல் கொண்டது. எனவே வெள்ளை புறந்தள்ளி கருப்பட்டியை சாப்பிட்டு நலமாக வாழ்வோம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்