Benefits of Orange Tea : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு என பல நன்மைகளை உடலுக்கு கொண்டுவரும் டீ எது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Orange Tea : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு என பல நன்மைகளை உடலுக்கு கொண்டுவரும் டீ எது தெரியுமா?

Benefits of Orange Tea : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு என பல நன்மைகளை உடலுக்கு கொண்டுவரும் டீ எது தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jun 11, 2024 11:00 AM IST

Benefits of Orange Tea : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு என பல நன்மைகளை உடலுக்கு கொண்டுவரும் டீ எது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Orange Tea : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு என பல நன்மைகளை உடலுக்கு கொண்டுவரும் டீ எது தெரியுமா?
Benefits of Orange Tea : இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு என பல நன்மைகளை உடலுக்கு கொண்டுவரும் டீ எது தெரியுமா?

ஆரஞ்சு பழத்தின் தோல் மற்றும் சாறில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரஞ்சு பழ தேநீர். இதில் வைட்டமின் சி, ஃப்ளேவனாய்ட்கள், பாலிஃபினால்கள் என எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்கு, எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இரும்புச்சத்துக்களை உடல் எளிதாக உறிஞ்ச உதவுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது. மனநிலையை மாற்றுகிறது. பதற்றத்தை குறைத்து, ஒட்டுமொத்த உடல் நலனையும் பேண உதவுகிறது. எனவே இந்த டீ பருகுவதால் உங்கள் உடலில் ஏற்படும் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

ஆரஞ்சு பழம் பிடிக்கும். ஆனால் அதை பழமாகவோ அல்லது சாறாகவோ பருக விருப்பமில்லையா? எனில் இதோ தேநீர் செய்து பருகுங்கள். உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணும் ஆரோக்கிய பானமாக இது இருக்கும். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நன்மைகள் என்ன?

ஆரஞ்சு பழ டீ ஏன்?

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கும். இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். வளர்சிதையை அதிகரிக்கும். ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்கும்.

உங்கள் உடலுக்கு ஆரஞ்சு பழங்கள் கொடுக்கும் இயற்கையான நன்மைகள் என்ன?

வைட்டமின் சி

ஆரஞ்சு பழங்கள் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஃப்ரி ரேடிக்கல்களால் ஏற்படும் செல்களின் சேதத்தை தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தின் தோல்கள் அல்லது சாறில் இருந்து நீங்கள் தயாரிக்கும் தேநீரில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பை அதிகரித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

ஃப்ளேவனாய்ட்கள்

ஆரஞ்சு பழங்களில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள், இது ஆன்டிஆக்ஸிடன்கள் ஆகும். இவை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு தருகின்றன. வீக்கத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மூளை இயக்கத்தை மேம்படுத்துகிறது. ஆரஞ்சு பழத்தின் தோல்களில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரில் இந்த நன்மைகள் அதிகம் உள்ளது.

பாலிஃபினால்கள்

டீத்தூளிலே பாலிஃபினால்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. வளர்சிதையை ஊக்கப்படுத்துகிறது. டீத்தூள் மற்றும் ஆரஞ்சு இரண்டும் சேரும்போது கிடைக்கும் பாலிஃபினால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் பானத்துக்கு கூடுதல் நன்மைகளைக்கொடுக்கிறது.

நீர்ச்சத்து

உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. உங்களின் உடலின் ஒட்டுமொத்த நன்மைக்கும் வழிவகுக்கிறது. எனவே ஆரஞ்சு டீ பருகுவது நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீரின் அளவை எட்ட உதவுகிறது. இது உங்கள் உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் நன்மைகளைக் கொடுத்து உங்கள் உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கிறது.

ஆரஞ்சு பழத்தின் டீயை பருகுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

ஆரஞ்சு பழத்தின் டீயை நீங்கள் பருகினால் அது உங்கள் இதய ஆரோக்கியத்தை இயற்கை முறையில் அதிகரிக்கச் செய்கிறது. இது உங்கள் உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. உங்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது. இது உங்கள் சருமத்தில் கொலஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகிறது.

கிரீன் டியுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து பருகும்போது உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். வீக்கத்தை குறைக்கும். இதன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

இதைத்தவிர, இதன் சுவையும், மணமும், உங்களின் மனநிலையை மாற்றும் தன்மை கொண்டது. உங்களின் பயம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது. டேலும் உங்களின் தேநீர் நேரத்தை இனிமையாக்குகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.