Benefits of Orange Peels : ஆரஞ்சு பழத்தோல்களை இனி தூக்கி எறிந்துவிடாதீர்கள்! அதில் எண்ணற்ற நன்மைகள் மறைந்துள்ளது!
Benefits of Orange Peels : ஆரஞ்சு பழத்தோலில் மறைந்திருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்தவேண்டும்?
ஆரஞ்சு பழத்தின் தோல்களை பயன்படுத்தும் வழிகள்
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு முடித்த பின்னரோ அல்லது அதை சாறு பிழிந்து குடித்த பின்னரோ அதன் தோல்களை என்ன செய்வீர்கள்? பெரும்பாலும் தூக்கித்தான் வீசுவோம். ஆனால் அதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. ஆச்சர்யமூட்டும் ஆரோக்கிய நன்மைகளைக்கொண்டுள்ளது.
இதன் நிறம் சுண்டியிழுக்கும். ஆனால், இதன் சுவையே கசப்பும், துவர்ப்பும் கலந்து இருக்கும். இந்த தோல் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்குமே சிறந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆரஞ்சு பழத்தோல்களில் ஒளிந்துள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
வைட்டமின் சி
ஆரஞ்சு பழத்தோலில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. அதன் சுளைகளைவிட அதிகளவிலான வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தோலில்தான் உள்ளது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சளியை எதிர்த்து போராடவும், உங்கள் சருமத்தை பளபளப்பாக்கவும் ஆரஞ்சு பழத்தோல்கள் உள்ளது.
செரிமான ஆரோக்கியம்
ஆரஞ்சு பழத்தோலில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றுக்கு நல்லது. இது செரிமானத்து உதவி, மலச்சிக்கலை தடுக்கிறது. வயிறு வலியை போக்குகிறது. வயிற்றில் ஏற்படும் அசவுகர்யங்களை நீக்குகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குடலில் நல்ல பாக்டீரியாக்களை தங்க வைக்கிறது.
உடல் உடையை குறைக்க உதவுகிறது
உடல் எடையை குறைக்க உதவும் உட்பொருட்களையும் கொண்டது ஆரஞ்சு பழத்தோல்கள். உடல் எடை மேலாண்மையில் உதவுகிறது. இவை கொழுப்பை எரிப்பதற்கு உதவுகின்றன. கொழுப்பு அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடல் ஆரோக்கியமான எடையை எட்டுவதற்கு உதவுகிறது.
மனஆரோக்கியத்துக்கு உதவுகிறது
ஆரஞ்சு பழத்தோலில் உள்ள உட்பொருட்கள் உங்களின் மனநிலையை மாற்றி, மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது மினி அரோமாதெரபி எடுத்த உணர்வைக்கொடுக்கிறது. உங்கள் கால் மற்றும் கைகளின் விரல்களின் இடையில் ஆரஞ்சு பழத்தோல்களை வைத்து தடவினாலே போதும். உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது.
இயற்கையாக சுத்தம் செய்கிறது
கடுமையான கெமிக்கல்களுக்கு விடைகொடுங்கள். ஆரஞ்சுப்பழத்தோலில் உள்ள எண்ணெய், சுத்தம் செய்வதற்கு மிகவும் ஏற்றது. இதை வினிகரில் கலந்து, நேரடியாக உபயோகப்படுத்துங்கள். அது உங்கள் வீட்டில் உள்ள கரைகளைப்போக்கும், உங்கள் இல்லத்துக்கும் நறுமணத்தைத்தரும்.
உங்கள் அன்றாட வாழ்வில் ஆரஞ்சு பழத்தோல்களை உபயோகிக்கும் வழிகள்
ஆரஞ்சு பழத்தோல்
ஆரஞ்சு பழத்தின் தோலில் தேநீர் செய்து அதை பருகலாம். ஆரஞ்சு பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரில் சிறிது தேன் கலந்து பருகினால் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்
சாலட்கள், இனிப்புகளில் சேர்த்து சாப்பிடலாம். உலரவைக்கப்பட்ட ஆரஞ்சு பழத்தோல்கள் கேக்குகளில் சேர்க்கப்படுகிறது. இதில் துவையல் அரைத்தும் சாப்பிடலாம்.
பிஸ்கட்கள் தயாரிப்பதிலும் பயன்படுத்தலாம். இப்படி எண்ணற்ற வழிகளில் பயன்படுத்தக்கூடிய ஆரஞ்சு பழத்தின் தோல்களை இனி தூக்கி வீசாமல், அதையும் உட்கொண்டு உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்