Benefits of Nutmeg Water : மூளைக்கு ஆற்றல்! பற்களுக்கு வலிமை! ஜாதிக்காய் தண்ணீரில் எத்தனை நன்மைகள் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Nutmeg Water : மூளைக்கு ஆற்றல்! பற்களுக்கு வலிமை! ஜாதிக்காய் தண்ணீரில் எத்தனை நன்மைகள் பாருங்க!

Benefits of Nutmeg Water : மூளைக்கு ஆற்றல்! பற்களுக்கு வலிமை! ஜாதிக்காய் தண்ணீரில் எத்தனை நன்மைகள் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Jun 18, 2024 05:23 PM IST

Benefits of Nutmeg Water : மூளைக்கு ஆற்றல் தரும். பற்களுக்கு வலிமை கொடுக்கும். ஜாதிக்காய் தண்ணீரில் எத்தனை நன்மைகள் உள்ளது என்று பாருங்கள்.

Benefits of Nutmeg Water : மூளைக்கு ஆற்றல்! பற்களுக்கு வலிமை! ஜாதிக்காய் தண்ணீரில் எத்தனை நன்மைகள் பாருங்க!
Benefits of Nutmeg Water : மூளைக்கு ஆற்றல்! பற்களுக்கு வலிமை! ஜாதிக்காய் தண்ணீரில் எத்தனை நன்மைகள் பாருங்க!

ஜாதிக்காயை தண்ணீரில் சேர்த்து பருகுவதால் உங்கள் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

ஜாதிக்காய், ஒரு பிரபலமான மசாலாப் பொருள், இது நட்ஸ்களின் சுவை கொண்டது. எனினும், இந்த மசாலாப் பொருள் சுவையை மட்டும் கொடுப்பதுடன், இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. காலையில் நீங்கள் தினமும் தண்ணீரில் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு ஜாதிக்காய்ப் பொடியை சேர்த்துக்கொள்வதால் உங்களுக்கு உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

செரிமானத்தை அதிகரிக்கிறது

ஜாதிக்காய், பாரம்பரிய மருத்துவத்தில் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இது செரிமான எண்சைம்களைத் தூண்டி, உணவை உடைத்து, பொதுவான செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. இதனால் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுவதில்லை.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

ஜாதிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தேவையான எண்ணெய் சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து உங்களை தொற்றுகளில் இருந்து காக்கிறது. மேலும் நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. உடலில் ஏற்படும் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.

கழிவுநீக்கத்துக்கு உதவுகிறது

ஜாதிக்காயில் உள்ள கழிவுநீக்கும் திறன்கள், உங்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை நீக்குகிறது. ஜாதிக்காய் ஊறவைத்த தண்ணீரை தினமும் பருகுவதால், அது உங்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் அது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. உங்கள் உடலில் இந்த முக்கிய உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது.

உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது

ஜாதிக்காய்ப் பொடிக்கு மனதை அமைதிப்படுத்தும் தன்மை உள்ளது. அதில் மிரிஸ்டிசின், மெக்கீசியம் போன்ற உட்பொருட்கள் உள்ளது. இவை உங்கள் மனதை அமைதிப்படுத்தி, உங்களின் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது. ஜாதிக்காய் தண்ணீரை தினமும் உறங்கச்செல்லும் முன் பருகுவது உங்கள் உறக்கம் வராமல் ஏற்படும் இன்சோமேனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும்.

மூளை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

ஜாதிக்காயில் முக்கிய எண்ணெய்கள் உள்ளது. அவை மிரிஸ்டிசின் மற்றும் மேஸ்லிக்னன் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் நரம்பியல் தன்மைகள் உள்ளது. இவை மூறையின் இயக்கத்தை அதிகரிக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது மற்றும் அல்சைமர் போன்ற ஞாபக மறதி வியாதிகள் ஏற்படாமல் தடுக்கிறது.

வலி மற்றும் வீக்கம்

ஜாதிக்காயில் உள்ள வீக்கம் மற்றும் வலி நிவாரணத் தன்மைகள், வலி மற்றும் வீக்கத்தைப் போக்குகிறது. குறிப்பாக ஜாதிக்காய் மூட்டுவலி, ஆர்த்ரிட்டிஸ் மற்றும் தசைவலி போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மிகவும் தேவையானது.

ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது

ஜாதிக்காயில் உள்ள பொட்டாசிய உட்பொருட்கள், ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. அது உங்களுக்கு ரத்த அழுத்தத்தை முறையாக பராமரிக்கிறது. இதில் கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. இது ஆரோக்கியமான இதயத்துக்கு உதவுகிறது.

பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

ஜாதிக்காய்ப் பொடியில் பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. அது பல் தொடர்பான தொற்றுக்களை எதிர்த்து பராடுகிறது. வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்குகிறது. மேலும் ஜாதிக்காயை ஊறவைத்த தண்ணீரை பருகுவதால், ஈறுகளில் ஏற்படும் பிரச்னைகளும் குறைகிறது. உங்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.

ஹார்மோன்களை சமம்படுத்துகிறது

ஜாதிக்காய்ப் பொடியில் ஹார்மோன்களை சமப்படுத்த உதவும் உட்பொருட்கள் உள்ளது. அது பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமமின்மையைப் போக்குகிறது. இது மாதவிடாய் வலிகளை குணப்படுத்துகிறது. இந்த மசாலாவின் ஃபைட்டோஈஸ்ட்ரோஜென் உட்பொருள், மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றுவதை பராமரிக்க உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேமபடுத்துகிறது

ஆன்டிமைக்ரோபைல் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஜாதிக்காய் தண்ணீரை பருகுவது முகப்பருக்களை போக்குகிறது. தழும்புகளை குறைக்கிறது. தெளிவான ஆரோக்கியமான சருமத்தைக் கொடுக்கிறது. இது சருமத்தின் நெகிழ்தன்மைக்கும் உதவுகிறது. வயோதிகம் ஏற்படும் அறிகுறைகளைக் குறைக்கிறது.

ஜாதிக்காய் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய்ப் பொடியை கலக்க வேண்டும். இரண்டும் கலந்து மிதமான சூட்டுக்கு வந்தவுடன், நன்றாக கலந்து காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவு உறங்கச் செல்லும் முன் பருகவேண்டும். உங்களுக்கு இத்தனை நன்மைகளும் கிடைக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.