Benefits of Night Study : இரவு நேரத்தில் படிப்பது இத்தனை நன்மைகளைத் தருமா? தேர்வுகளை எதிர்கொள்ள தயாரா மாணவர்களே?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Night Study : இரவு நேரத்தில் படிப்பது இத்தனை நன்மைகளைத் தருமா? தேர்வுகளை எதிர்கொள்ள தயாரா மாணவர்களே?

Benefits of Night Study : இரவு நேரத்தில் படிப்பது இத்தனை நன்மைகளைத் தருமா? தேர்வுகளை எதிர்கொள்ள தயாரா மாணவர்களே?

Priyadarshini R HT Tamil
Aug 02, 2024 04:04 AM IST

Benefits of Night Study : இரவு நேரத்தில் படிப்பது இத்தனை நன்மைகளைத் தருமா? எனில் இரவு நேரத்தில் தேர்வுகளுக்கு தயார் செய்து பலன்பெறுங்கள் மாணவர்களே.

Benefits of Night Study : இரவு நேரத்தில் படிப்பது இத்தனை நன்மைகளைத் தருமா? தேர்வுகளை எதிர்கொள்ள தயாரா மாணவர்களே?
Benefits of Night Study : இரவு நேரத்தில் படிப்பது இத்தனை நன்மைகளைத் தருமா? தேர்வுகளை எதிர்கொள்ள தயாரா மாணவர்களே?

மாணவர்கள், குறிப்பாக தங்களின் 10 அல்லது 12ம் வகுப்பு பொதுதேர்வுகளுக்க்கு தயாராகும் மாணவர்கள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் என அனைவருக்கும் படிப்பது மிகவும் அவசியம். ஆனால் எந்த நேரத்தில் படித்தால் நல்லது என்று அவர்களுக்கு தெரியாது.

ஒவ்வொருவரும் ஒருமுறையை பின்பற்றி படிப்பார்கள். ஒரு சிலருக்கு சத்தம்போட்டு படிப்பது வழக்கமாக இருக்கும். ஒரு சிலர் மெதுவாகப்படிப்பார்கள். ஒரு சிலர் இரவில், அதிகாலையில், பகல் நேரத்தில் என வெவ்வேறு நேரங்களில் படிப்பார்கள். இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இரவு நேரத்தில் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

குறைந்த அளவு கவனச்சிதறல்கள்

இரவு நேரத்தில் குறைவான அளவு கவனச்சிதறல்களே ஏற்படும். இரவின் அமைதி உங்களுக்கு படிக்கும் மனநிலையை உருவாக்கித்தரும். யாரும் இடையூறு செய்யமாட்டார்கள். இரவில் வாகன சத்தங்கள், மற்ற எவ்வித சத்தங்களும் குறைவாக இருக்கும். இதனால் உங்களின் கவனம் அதிகரிக்கும். நீங்கள் முழு கவனத்தையும் எவ்வித இடையூறும் இன்றி படிப்பில் செலுத்தலாம். இதனால் இரவு உங்களுக்கு படிக்க உகந்த நேரமாக இருக்கும்.

கிரியேட்டிவிட்டி அதிகரிக்கும்

இரவு நேரத்தில் நிலவும் அமைதி மற்றும் ரம்மியமான சூழல் உங்களின் கிரியேட்டிவிட்டியை அதிகரிக்கும். உங்களின் கிரியேட்டிவிட்டியை தூண்டிவிட்டு, உங்களை புதுமையான சிந்திக்க வைக்கும். இதனால் உங்களால் நிறைய புதிய விஷயங்களை கண்டுபிடிக்கவும் முடியும்.

படித்தவற்றை நினைவில் வைத்தல்

நீங்கள் உறங்கச்செல்லும் முன் படித்தவை அனைத்தும் அப்படியே நினைவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் உறங்கும் நேரத்தில் உங்கள் மூளை அன்றைய நாளின் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும். அதனால் நீங்கள் படித்துவிட்டு உறங்கச்செல்லும்போது மூளை மீண்டும் அதை மீண்டும் அசைபோடும்போது அது உங்கள் நினைவாற்றலில் நீண்ட நாட்கள் தக்கவைக்கப்படுகிறது.

திறன் அதிகரிக்கும்

நீங்கள் உங்களுக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். ஏனெனில் அமைதியான சூழலில் உங்களுக்கு குறைவான இடையூறுகளே ஏற்படும். எனவே நீங்கள் படிக்க முடிவெடுத்திருந்த பகுதிகளை கடகடவென படித்து முடித்துவிடலாம்.

பட்டியலிடுவதில் நெகிழ்ச்சி

நீங்கள் இரவு நேரத்தில் படிப்பதால், உங்களின் நாளை நீங்கள் திறம்பட திட்டமிட உதவுகிறது. நீங்கள் இதனால், மற்ற வகுப்புகள் அல்லது பகுதி-நேர வேலைகளுக்கு செல்லலாம். இரவு நேரத்தில் உங்களுக்கு தேவையானவற்றி படித்து முடித்துவிடலாம்.

உங்களுக்கு தேவையான ஆன்லைன் மெட்டீரியல்கள்

உங்களுக்கு தேவையான ஆன்லைன் கல்வி மெட்டீரியல்கள் மற்றும் டேட்டாக்கள் ஆகிய அனைத்தும், உங்களுக்கு ஆன்லைனில் எளிதாக கிடைத்துவிடும். ஏனெனில் அப்போது உங்களுக்கு அதிவேக இன்டர்நெட் எவ்வித இடையூறுமின்றி கிடைக்கும். 

ஏனெனில் பகலில்தான் அதிகளவில் இணையதளங்களை பயன்படுத்துவார்கள். இரவில் அனைவரும் உறங்கச் சென்றுவிடுவதால் அவற்றின் பயன்பாடு குறைந்து, நீங்கள் அதிவேகமாக இணையத்தை உபயோகித்து, தேவையான தகவல்களை எளிதில் பெற்றுவிட முடியும்.

தனிப்பட்ட படிப்பு அறை

இரவு நேரம் உங்களின் படிக்கும் அறையை தனிப்பட்டதாக்குகிறது. ஏனெனில், அனைவரும் உறங்கச் சென்றுவிடுவதால், யாரும் உள்ளேயே வரமாட்டார்கள். நீங்கள் மட்டும் அமைதியாக அமர்ந்து அங்கு படித்துக்கொண்டிருக்கலாம். மற்றவர்களின் தேவைக்கும் இங்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தேவை இருக்காது. எனவே நீங்கள் எவ்வித தொந்தரவும் இன்றி நிம்மதியாகப் படிக்கலாம்.

சுய ஒழுக்கம் மற்றும் நேர மேலாண்மை

நீங்கள் இரவில் படிப்பது உங்களின் சுயஒழுக்கத்தையும், நேர மேலாண்மை திறனையும் அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில், நீங்கள் படிப்பதற்கு என்று இரவு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அன்றாடம் அதை கடைபிடிப்பதால் உங்களின் சுயஒழுக்கம் மேம்படுகிறது. மேலும் நீங்கள் திட்டமிட்டு இரவே படித்து முடித்து விடுவதால், உங்களுக்கு பகலில் மற்ற வேலைகளில் ஈடுபடலாம். நேரமும் முறையாகக் கையாளப்படுகிறது.

போட்டிகள் குறைவு

நீங்கள் எங்கு சென்று படிக்க விரும்பினாலும், அது நூலகமோ அல்லது படிக்கும் அறைகளோ அல்லது அனைவரும் அமர்ந்து படிக்கும் இடமோ கூட்டம் இரவு நேரத்தில் குறைவாக இருக்கும். இதனால் உங்களுக்கு நிறைய இடமும், தேவையான பொருட்களும் கிடைக்கின்றன. இதனால் நீங்கள் தனியாக, அமைதியாக படிக்க முடிகிறது.

கவனம் மற்றும் தெளிவு

நீங்கள் இரவு நேரத்தில் அமைதியாக சூழலில் படிக்கும்போது, அது உங்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது. உங்களால் எவ்வித இடையூறுமின்றி அதிகளவில் சிந்திக்கவும் முடிகிறது. நீங்கள் படிக்கும் தகவல்களை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் நீங்கள் படிப்பது மனதில் நிற்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.