தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Nethiran Banana : ஒரே நேரத்தில் இதையும் செய்யும்; அதையும் செய்யும்; ஆச்சர்யம் நிறைந்த இந்த பழத்தின் நன்மைகள்

Benefits of Nethiran Banana : ஒரே நேரத்தில் இதையும் செய்யும்; அதையும் செய்யும்; ஆச்சர்யம் நிறைந்த இந்த பழத்தின் நன்மைகள்

Priyadarshini R HT Tamil
Apr 19, 2024 05:32 PM IST

Benefits of Nethiram Banana : அது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக உள்ளது. நேந்திரம் பழத்தில் பழ பஜ்ஜி, பழம்பெரி என கேரள மக்கள் பல்வேறு ஸ்னாக்ஸ்களை தயாரித்து சாப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் அந்தப்பழத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்.

Benefits of Nethiran Banana : ஒரே நேரத்தில் இதையும் செய்யும்; அதையும் செய்யும்; ஆச்சர்யம் நிறைந்த இந்த பழத்தின் நன்மைகள்
Benefits of Nethiran Banana : ஒரே நேரத்தில் இதையும் செய்யும்; அதையும் செய்யும்; ஆச்சர்யம் நிறைந்த இந்த பழத்தின் நன்மைகள்

ட்ரெண்டிங் செய்திகள்

அது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக உள்ளது. நேந்திரம் பழத்தில் பழ பஜ்ஜி, பழம்பெரி என கேரள மக்கள் பல்வேறு ஸ்னாக்ஸ்களை தயாரித்து சாப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் அந்தப்பழத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்.

நேதிரன் பழத்தில் உள்ள நற்குணங்கள் தெரிந்தால், அந்தப் பழத்தை சாப்பிடுவதை நீங்களும் விடமாட்டீர்கள். நேந்திரன் பழத்தின் நன்மைகள் என்னவென்றுதான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நேந்திரன் பழத்தில் உள்ள நன்மைகள்

ஒரு நேந்திரன் பழத்தில் 112 கலோரிகள் உள்ளது. கொழுப்பு சுத்தமாக இல்லை. புரதச்சத்து ஒரு கிராம், கார்போஹைட்ரேட் 29 கிராம், நார்ச்சத்துக்கள் 3 கிராம் உள்ளது. தினசரி அளவில் வைட்டமின் சி 12 சதவீதம், ரிபோஃப்ளாவின் 7 சதவீதம், ஃபோலேட் 6 சதவீதம், நியாசின் 5 சதவீதம், காப்பர் 11 சதவீதம், பொட்டாசியம் 10 சதவீதம், மெக்னீசியம் 8 சதவீதம் உள்ளது.

சரும பாதுகாப்பு

நேந்திரன் வாழைப்பழம் சுவையானது மட்டுமின்றி, சருமத்தின் சிறந்த நண்பனாகவும் உள்ளது. பளபளக்கும் சருமத்தைக் கொடுக்கிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சத்து உங்கள் சருமத்தை மிருதுவானதாகவும், பிரைட்டாகவும் காட்டுகிறது. வயோதிக்கத்தால் ஏற்படும் சரும சுருக்கத்தை தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வயோதிகத்தை தாமதமாக்குகிறது.

நீரிழிவு மேலாண்மை

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக உள்ளது. நேந்திரன் வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தி பாதுகாக்கிறது. நேந்திரன் வாழைப்பழத்தில் உள்ள குறிப்பிட்ட பண்புகள், உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது.

உடல் எடை குறைப்பு

இதில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் உடலுக்கு நீண்ட நேரம் போதிய சக்தியைக் கொடுக்கிறது. இதனால் உங்கள் வயிறு நீண்ட நேரத்துக்கு நிரம்பிய உணர்வுடன் இருப்பதால், தேவையற்ற நொறுக்குத்தீனிகள் தவிர்க்கப்படுகிறது.

நேந்திரன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதாக உள்ளது. இதனால் உங்கள் உடல் எடை குறைக்கப்படலாம்.

உடல் எடை அதிகரிப்பு

நேந்திரன் வாழ்ப்பழத்தை உட்கொள்ளும்போது, அது உங்கள் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கிறது. உங்களுக்கு விரைவான ஆற்றல் கிடைக்கவேண்டுமா? நேந்திரன் வாழைப்பழம் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக்கொடுக்கிறது.

இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மினரல்கள் உங்கள் உடலின் தசைகளை கட்டமைக்க சிறந்தது மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியமாக எடை போட உதவுகிறது.

செரிமான ஆரோக்கியம்

இந்தப்பழம் உங்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து, உங்கள் உடலின் செரிமான மண்டலத்தை காக்கிறது. வயிறு உப்புசத்தை குறைத்து, மலத்தை வெளியேற்றுகிறது.

ஆரோக்கியமான குடல்தான் ஆரோக்கியமாக உடலை வளர்க்கிறது. நேந்திரன் வாழைப்பழத்தால் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.

பெண்களுக்கு என்ன பயன்?

நேந்திரன் வாழைப்பழம் பெண்களின் உடல் ஆற்றவை அதிகரிக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது, எலும்பை வலுவாக்குகிறது. மாதவிடாய் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

வலிகளைப்போக்கி, ஆரோக்கியமான மாதவிடாய் காலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அனீமியாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, நேந்திரன் பழத்தில் உள்ள இரும்புச்சத்துக்கள், ரத்தத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்