Benefits of Muskmelon : முலாம் பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன பாருங்கள்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Muskmelon : முலாம் பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன பாருங்கள்?

Benefits of Muskmelon : முலாம் பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன பாருங்கள்?

Priyadarshini R HT Tamil
Jan 28, 2025 07:00 AM IST

Benefits of Muskmelon : முலாம் பழம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Muskmelon : முலாம் பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கம் நன்மைகள் என்ன பாருங்கள்?
Benefits of Muskmelon : முலாம் பழத்தை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கம் நன்மைகள் என்ன பாருங்கள்?

உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது

முலாம் பழத்தில் அதிகளவில் நீர்ச்சத்துக்கள் உள்ளது. இதில் கிட்டத்தட்ட 90 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதனால் முலாம் பழம் உங்களை நாள் முழுவதும் நீர்ச்சத்துக்களுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது உங்களுக்கு குளிர் காலங்களில் மிகவும் நல்லது. அப்போதுதான் உடல் நீர்ச்சத்தை இழக்கும். இந்தப்பழம் மற்றும் இதன் சாறுகள் மிகக்குறைந்த விலையில் எளிதில் கிடைக்கக்கூடியவை என்பதால் இதை கட்டாயம் எடுத்துக்கொள்வது அவசியம்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

முலாம் பழத்தில் அதிகளவில் பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் சத்துக்கள் உள்ளது. இது உடலில் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது. இது இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

முலாம் பழத்தில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்களும், தண்ணீர் சத்துக்களும் அதிகம் என்பதால், இது உங்களுக்கு சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, இது சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து, உங்களை அதிகம் சாப்பிடுவதில் இருந்து கட்டுப்படுத்துகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது

முலாம் பழம் குறைந்த கிளைசமின் இண்டக்ஸ் உணவுப்பட்டியலில் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கையாள உதவுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது

முலாம் பழத்தில் அதிகம் உள்ள வைட்டமின் ச சத்துக்கள், உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது உங்கள் உடல் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் உங்களுக்கு நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இந்தப்பழம் உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.

மலச்சிக்கலைப் போக்குகிறது

முலாம் பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், உங்கள் குடல் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. இது உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இது செரிமான கோளாறுகளும் உங்களுக்கு ஏற்படாமல் காக்கிறது.

சிறுநீரகக் கற்களைத் தடுக்கிறது

முலாம் பழத்தில் அதிக நீர்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளைப் போக்குகிறது. இது உங்களுக்கு சிறுநீரகத்தில் கற்களால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கிறது.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

முலாம் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின்களை உடல் வைட்டமின் ஏவாக மாற்றுகிறது. இது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கண் பார்வையை கூராக்குகிறது. வயோதிகம் தொடர்பாக கண்களில் ஏற்படும் கோளாறுகளைப் போக்குகிறது.

மனஅழுத்தத்தைக் குறைக்கிறது

முலாம் பழத்தில் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலுக்கு இதமளிக்கும். உங்கள் உடல் மனஅழுத்தம் மற்றும் பயத்தை கையாள உதவுகிறது.

ஆரோக்கியமான சருமம்

முலாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் சருமத்தை சேதத்தில் இருந்து காக்கிறது. இதனால் உங்களுக்கு வயோதிகம் தொடர்பான கேளாறுகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது உங்களுக்கு பளபளக்கும் சருமத்தைக் கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.