Benefits of Mushroom Coffee : காளானில் காபியா? ஆச்சர்யமாக உள்ளதா? 7 நன்மைகள் கொண்டது! காலையில் உற்சாகத்தை அள்ளித்தரும்!
காலையில் உற்சாகத்தை அள்ளித்தரும் காளான் காபியில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

காளானில் காபி தயாரிக்கப்படுகிறதா என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளதா? காளான் பொடி மற்றும் காபி பொடி இரண்டையும் ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் கலந்து பருகவேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால் கொதிக்கும் பாலிலும் கலந்துகொள்ளலாம். இப்போது காபியில் பல விஷயங்களை கலந்து பருகும் வழக்கம் உள்ளது. தேங்காய்ப்பால் காபி, வெண்ணெய் காபி, தேங்காய் எண்ணெய் காபி என உங்களின் வழக்கமான காபி இப்போது பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது. இதற்கு நீங்கள் மருத்துவ குணமுள்ள காளான்களை உபயோகிக்க வேண்டும். இந்த காளான் காபி உங்களுக்கு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. மருத்துவ குணம் கொண்ட காளான் பொடிகள் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. சாங்கா, ரெய்ஷி, ரயன்ஸ் மேன், கார்டைசெப் போன்ற மருத்துவ குணம் கொண்ட காளான்களில் இருந்து காபி தயாரிக்கப்படுகிறது.
மஸ்ரூம் காபி பருகுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
அச்சத்தை குறைக்கிறது
ரெஷி போன்ற காளான்கள் உங்களின் அச்சத்தைக் குறைக்கிறது. உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமும் 2 அல்லது 3 கப்கள் இனிப்பில்லாத காபியைக் பருகுவது, உங்களுக்கு பதற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது. சோர்வு மற்றும் அச்ச உணர்வைக் குறைக்க காளான் பொடி உதவுகிறது.
உடலில் உள்ள ஆற்றல் அளவை அதிகரிக்கிறது
நீங்கள் பருகும் மஸ்ரூம் காபியில் கார்டைசெப்கள் இருந்தால், அது உங்கள் உடல் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் அளவை அதிகரிக்கிறது. சோர்வு மற்றும் சோம்பேறித்தனத்துக்கு கார்டைசெப்கள் என்பது முக்கியமானது ஆகும். காபியில் உள்ள காஃபைனும், உங்கள் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சோர்வைப் போக்கும் ஆற்றல் கொண்டது. உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.