Benefits of Moringa seeds : ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? அதற்கு இந்த விதைகள் மட்டும் போதும்! முருங்கை விதையின் மற்ற நன்மைகள்
Benefits of Moringa Seeds : முருங்கை விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
முருங்கை விதைகள் முருங்கை காய்களில் இருந்து எடுக்கப்படுகின்றன. ஃபிரஷ்ஷாக பசுமையாக இருக்கும்போது மிருதுவாக சாப்பிட ஏதுவாக இருக்கும். ஆனால், காய்ந்தவுடன், கடினமாகி சிறிய கொட்டைகள் போல் இருக்கும்.
இவற்றின் நிறமும் சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும். இவற்றை வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடலாம். முருங்கையில் கால்சியம், இரும்பு மற்றும் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளன. இது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. முருங்கை விதையில் உள்ள பல்வேறு நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவுகிறது
முருங்கை இலைகளை 15 நிமிடங்கள் சூடான தண்ணீரில் சேர்த்து உறங்கச்செல்லும் முன் வடிகட்டி பருகவேண்டும். அப்படி பருகும்போது, உங்களின் இரவு உறக்கம் நன்றாக இருக்கிறது. நல்ல உறக்கம் அடுத்த நாளின் நல்ல துவக்கம். எனவே உங்கள் உறக்கம் சிறக்க முருங்கை உதவுகிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்தது
முருங்கை விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் செரிமான மண்டலத்தில் உணவு நகர்ந்து செல்வதற்கு உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது
முருங்கை விதைகளில் உள்ள சிங்க் சத்துக்கள் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. அது உங்கள் உடல் நீரிழிவு நோயை மேலாண்மை செய்ய உதவுகிறது.
இரும்புச்சத்துக்கள் நிறைந்தது
மூன்று முறை கீரை சாப்பிடும்போது கிடைக்கும் நன்மை ஒரு முறை முருங்கை விதை சாப்பிடுவதில் கிடைக்கும். இது காய்கறி உணவுகள் மட்டுமே உட்கொள்பவர்களுக்கு மிகவும் நல்லது.
உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அதைப்போக்க இது உங்களுக்கு உதவும். உங்கள் உடல் ரத்தத்தை அதிகரிக்கவும், உங்கள் தசைகளுக்கும், உறுப்புக்களுக்கும், திசுக்களுக்கும் ஆக்ஸிஜனை சுமந்து செல்ல இரும்புச்சத்துக்கள் உதவுகிறது.
மூட்டு வலியை போக்குகிறது
முருங்கை விதைகளில், கால்சியம் அதிகம் உள்ளது. இது மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு உதவுகிறது. வீக்கத்தை குறைத்து, ஆர்த்தரிடிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்னைகளை போக்குகிறது.
கொழுப்பை குறைக்கிறது
கெட்ட கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்றுவதில், முருங்கை விதைகளின் பங்கு அளப்பரியது.
புற்றுநோய் செல்களை குறைக்கும்
முருங்கை விதைகளில் உள்ள கார்சினோஜெனிக் குணங்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கிறது. இதனால் புற்றுநோய் செல்களை இறக்கச்செய்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
முருங்கை விதைகள் உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிடைஸ் கொழுப்புகளை குறைக்கிறது. உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இதய திசுக்களை பாதுகாத்து, உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதய திசுக்களை சேதத்தில் இருந்து காக்கிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் பவர் ஹவுஸ்
முருங்கை விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் 30க்கும் மேற்பட்ட ஆன்டி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி ஆகியவை உள்ளன.
உங்கள் உடலை ஆக்ஸிடேடிவ் சேதத்தில் இருந்து பாதுகாக்கும் ஃப்ரி ராடிக்கல்களை அழிக்கும் சக்தி உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காக்கிறது.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
வீக்கம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி செப்டிக் குணங்கள் நிறைந்தது. இது உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு சிறந்தது. இதில் இருந்து பிரித்து எடுக்கப்படும் எண்ணெய் உங்கள் சரும பிரச்னைகளை குணப்படுத்த உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் கட்டிகள், சன்பர்ன் ஆகியவற்றை போக்குகிறது. உங்கள் சருமத்தின் பொலிவை அதிகரிக்கிறது.
டாபிக்ஸ்