Benefits of Moong Bean : தினம் ஒரு தானியம்! உடலில் கெட்ட கொழுப்பை நீக்குவது முதல் பல நன்மை! பாசிப்பயிறில் என்ன உள்ளது?
Benefits of Moong Bean : தினம் ஒரு தானியம்! உடலில் கெட்ட கொழுப்பை நீக்குவது முதல் பல நன்மைகள் பாசிப்பயிறில் என்ன உள்ளது?
200 கிராம் பாசிப்பருப்பில், 212 கலோரிகள் உள்ளது. கொழுப்பு 0.8 கிராம், புரதம் 14.2 கிராம் கார்போஹைட்ரேட் 38.7 கிராம், நார்ச்சத்துக்கள் 15.4 கிராம், ஃபோலேட் 80 சதவீதம், மேங்கனீஸ் 30 சதவீதம், மெக்னீசியம் 24 சதவீதம், வைட்டமின் பி1 22 சதவீதம், பாஸ்பரஸ் 20 சதவீதம், இரும்புச்சத்து 16 சதவீதம், காப்பர் 16 சதவீதம், பொட்டாசியம் 15 சதவீதம், சிங்க் 11 சதவீதம், வைட்டமின் பி2, 3, 5, 6 மற்றும் செலினியம் ஆகிய அனைத்தும் நிறைந்தது.
பாசிபயிறில் புரசத்த்து நிறைந்துள்ளது. இதி ஃபினைலாலானைன், ஐசோலிசியூன், வாலைன், லைசைன், அர்ஜினைன் உள்ளிட்ட பல முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த முக்கிய அமிலங்களை உங்கள் உடல் தானாக சுரக்காது. இந்த பயிறை முளைக்கட்டி சாப்பிடும்போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாறிவிடும்.
இதில் கலோரிகளும், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் முளை கட்டாததைவிட அதிகம். ஃபைடிக் அமில அளவு முளைகட்டும்போது குறைகிறது. அது உடலுக்கு தேவையற்றது. இது உடலில் சிங்க், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை குறைக்கிறது.
அதிக ஆன்டிஆக்ஸிடன்ட் அளவுகள் நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை குறைக்கிறது
இதில் ஆரோக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஃபினோலிக் அமிலம், ஃப்ளேவனாய்ட்ஸ், சினமிக், கஃபைக் ஆகியவை ஆகும். முளைக்கட்டிய பாசிப்பயிறில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. முளைக்கட்டாததைவிட 6 மடங்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
வெயில் காலத்தில் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கிறது
வெட்ப நாடுகளில் பாசிப்பயிறு சூப் வெயில் காலங்களில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதில் உள்ள அழற்சிக்கு எதிரான குணங்கள் வெயிலால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்கிறது. தாகத்தை குறைக்கிறது, உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது.
உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை காக்கிறது
உடலில் அதிகளவில் கெட்ட கொழுப்பு சேரும்போது இதய நோய்கள் ஏற்படுகிறது. பாசிப்பயிறு அதை சேரவிடாமல் தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
பொட்டாசிய, மெக்னீசிய, நார்ச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
உயர் ரத்த அழுத்தம் கடுமையான ஆரோக்கிய குறைபாடு. இதனால் இதய நோய் ஏற்பட்டு, மரணம் கூட நேரிடுகிறது. பாசிப்பயிறு ரத்த அழுத்ததை குறைக்க உதவுகிறது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
செரிமான உறுப்புக்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
இதில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் செரிமானத்துக்கு உதவுபவை. நார்ச்சத்து நிறைந்தது. அவை கரையக்கூடிய பெக்டின் என்ற நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால் அவை வயிற்றில் இருந்து குடலுக்கு உணவை விரைவாக அனுப்பு உதவுகிறது. இதில் உள்ள ஸ்டார்ச் குடல் பாக்டீரியாக்களை ஆரோக்கியமாக்குகிறது. அந்த பாக்டீரியாக்கள் ஃபேட்டி ஆசிட்களை உருவாக்குகின்றன. அது உங்கள் குடல் செல்களுக்கு ஊட்டமளித்து வயிறு நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தி குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது
சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், உயர் ரத்த சர்க்கரை கடுமையான ஆரோக்கிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இது நீரிழிவு நோய் மற்றும் பல்வேறு நீண்ட நாள் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். எனவே ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பது அவசியம். பாசிப்பயிறு அதற்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக அனுப்ப உதவுகிறது.
பசியை கட்டுப்படுத்தி, எடை குறைப்புக்கு உதவுகிறது
இதில் உள்ள நார்ச்சத்தும், புரதச்சத்தும் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இவை பசியை தூண்டும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகின்றன.
ஆரோக்கியமான கர்ப்ப காலத்துக்கு உதவுகிறது
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஃபோலேட் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஃபோலேட் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பெரும்பாலான பெண்களுக்கு அது போதியளவு கிடைக்காததால், பிறப்பு குறைபாடுகள் ஏற்படுகிறது. ஆனால், பாசிப்பருப்பில், 80 சதவீதம் உள்ளது.
இதில் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. இவையும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகம் தேவை. ஆனால் கர்ப்பிணிகள் ஊறவைத்து முளைகட்டிய பாசிப்பருப்பை பச்சையாக சாப்பிடக்கூடாது. அதில் பாக்டீரியாக்கள் இருக்கும். அது தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே சமைத்து உண்பதுதான் பாதுகாப்பானது.
எளிதாக உங்கள் உணவில் சேர்க்கலாம்
இதை சாலட், சூப், குழம்பு என எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது கொஞ்சம் இனிப்பாக இருக்கும். இதில் இனிப்பு கஞ்சி கூட வெல்லம் சேர்த்து செய்யலாம். இதை ஊறவைத்து வேகவைத்து சமைக்க வேண்டும். இதை முளைக்கட்டி பச்சையாகவும் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்