மலச்சிக்கல், ரத்தசோகை நீக்கி கண்பார்வை, சருமப் பளபளப்பை தரும் மூக்கிரட்டை மூலிகை
மலச்சிக்கல், ரத்தசோகை நீக்கி கண் பார்வை, சருமப் பளபளப்பை தரும் மூக்கிரட்டை மூலிகையின் பல்வேறு மருத்துவப் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

மூக்கிரட்டை மூலிகை
சாதாரணமாக சாலையோரங்களில் காணும் சில செடிகள், மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அவற்றின் அளப்பரிய நற்பண்புகள் மூலமாக அறிந்திருப்போம். அந்த வகையில் களைச் செடி என விவசாயிகள் ஒதுக்கும் ஒரு செடிதான், மனிதர்களுக்கு, அரிய மூலிகையாக, அவர்களின் ஆயுளை காக்கும் மூலிகையாக விளங்குகிறது. அதுதான் மூக்கிரட்டை மூலிகை
இன்றைக்கு நகரங்களில் மூலிகைகளின் மேல் உள்ள ஈர்ப்பு, கிராமங்களில் இன்னும் பரவலாகவில்லை.
எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தனித் தன்மையை வளரும் ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும்.