Benefits of Mint : மூளையை ஷார்ப்பாக்குவது முதல் வாய் துர்நாற்றத்தைப் போக்குவது வரை புதினாவில் எத்தனை நன்மைகள் பாருங்க!
Benefits of Mint : மூளையை ஷார்ப்பாக்குவது முதல் வாய் துர்நாற்றத்தைப் போக்குவது வரை புதினாவில் எத்தனை நன்மைகள் உள்ளது என்று பாருங்கள்.

புதினாவில் உள்ள சத்துக்கள்
புதினாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், கால்சியம் ஆகிய அனைத்திலும் பாக்டீரியாவுக்கு எதிரான குணங்கள் உள்ளது.
இதில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
புதினா இலைகளில் கலோரிகள் குறைவாக உள்ளது. புரதம் மற்றும் கொழுப்புச்சத்துக்கள் குறைவாக உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் அதற்கு புதினா இலைகளை பயன்படுத்தலாம்.
புதினாவின் நன்மைகள்
செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது
புதினா இலைகள் பசியை நன்றாக தூண்டக்கூடியவை- இது செரிமான மண்டலத்தை தூண்டி உணவை செரிக்கும் எண்சைம்கள் அதிகம் சுரக்கச் செய்கிறது.
புதினா எண்ணெய் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் ஆற்றல் கொண்டது. இது செரிமான கோளாறுகளை சரிசெய்யவும், வயிற்று தொற்றுகளை சரிசெய்யவும் உதவும். இதில் உள்ள மெத்தனால், வலிப்பை குறைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
குடலில் ஏற்படும் எரிச்சலைப் போக்குகிறது
செரிமான கோளாறு குடலில் எரிச்சலை ஏற்படுத்தும். இது வயிற்றில் வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் மற்றும் செரிமான கோளாறு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
குடல் எரிச்சலுக்கு உணவு முறை மாற்றங்களே தீர்வு என ஆய்வுகள் கூறுவதால், புதினா அதற்கு உதவும். புதினாவில் உள்ள மென்த்தால், உங்களின் தசைகள் மற்றும் செரிமான மண்டலத்தையும் அமைதிப்படுத்தும்.
சுவாச பிரச்னைகளை மேம்படுத்துகிறது
புதினா, ஆஸ்துமா நோயாளிகளுக்கு நெஞ்சில் ஏற்படும் நெரிசலைப்போக்கவும், அவர்களை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. தினமும் புதினாவை சாப்பிடுவது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. மூக்கடைப்பை சரிசெய்ய புதினா உதவுகிறது. இதனால் சுவாசம் எளிதாகிறது. இது நாள்பட்ட இருமல் மற்றும் எரிச்சலைப் போக்குகிறது.
பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
வாய்க்கு புத்துணர்வு தரும். நீங்கள் வாயில் துர்நாற்றம் வீசக்கூடிய ஏதாவது சாப்பிட்டுவிட்டால் அப்போது வீசும் நாற்றத்தை களைய நீங்கள் புதினாவை மெல்லலாம். உங்கள் சுவாசத்துக்கு புதினா இலைகள் புத்துணர்வைத்தரும்.
இதில் உள்ள உட்பொருட்கள், பற்களில் தங்கிவிடும் பிளேகை அகற்று இது உதவும். இதனால்தான், பேஸ்ட் மற்றும் மவுத் வாஷ்கள், சூயிங்கம்களில் புதினா பயன்படுத்தப்படுகிறது.
மூளையின் ஆற்றலை மேம்படுத்துகிறது
புதினா இலைகள் மூளைக்கு சிறந்த டானிக் ஆகும். பல்வேறு ஆய்வுகளும் அதை உறுதிப்படுத்தியுள்ளன. உங்கள் மூளையின் திறனை அதிகரிக்க புதினா இலைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். இது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது மற்றும் மனஅழுத்தத்தை போக்குகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
புதினாவில், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் திறனை அதிகரிக்கிறது. இதில் உள்ள தாவர வைட்டமின்கள் உங்கள் செல்கள் சேதமடைவதை தடுக்க உதவுகிறது. புதினா இலைகள் சில எண்சைம்களை புகுத்தி, கட்டிகள் வருவதையும் போக்குகிறது.
மனஅழுத்தத்தை குறைக்கிறது
புதினா மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதன் மனம் மனஅழுத்தத்தைப்போக்கி, உங்களின் மனதுக்கு புத்துணர்ச்சி தருகிறது. புதினாவின் நறுமணம் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. புதினாவை நீங்கள் தேநீரில் கலந்துகொள்ளலாம். மனஅழுத்தத்தைப்போக்கி மனஅமைதியை அதிகரிக்க புதினா குளியல் பரிந்துரைக்கப்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும்போது ஏற்படும் வலியை போக்குகிறது
பாலூட்டும் தாய்மார்களுக்கு தங்களின் முளைக்காம்புகளில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. வெடிப்பு ஏற்பட்ட முளைக்காம்புகளில் புதினா எண்ணெயை தடவினால், அது வலியைப் போக்குகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
புதினா இலைகள், உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரித்து, உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது. புதினா தேநீர் என்பது, கலோரிகள் இல்லாத உடல் எடை குறைக்கப் பயன்படுத்தும் ஒரு பானம்.
சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது, முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை மாற்ற உதவுகிறது
புதினா இலைகள் பாரம்பரிய மருத்துவத்தில் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இது பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிராக செயல்படுகிறது. முகப்பருக்கள் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை சருமத்தில் சீபம் எண்ணெய் சுரப்பதை தடுத்து, முகப்பருக்களை குணப்படுத்த உதவுகிறது.
புதினா இலைச்சாறுகள், முகப்பருக்களை தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. புதினாவில் உள்ள மென்தால் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. சருமத்தை மென்மையாக்கி சருமத்தில் ஏற்படும் எரிச்சலைப் போக்குகிறது.
தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
புதினாவில் உள்ள கெரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து, தலைமுடி உதிர்வைப் போக்குகிறது. புதினாவில் உள்ள நுண்ணுயிர்களுக்கு எதிரான மற்றும் பூஞ்ஜைகளுக்க எதிரான குணங்கள் பேன், பொடுகு ஆகியவற்றை போக்க உதவுகிறது. புதினா எலுமிச்சை சாறு, இஞ்சி என அனைத்தையும் அரைத்து தலையில் தடவி குளித்தால் தலைமுடிக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
காலையில் எழுந்தவுடன் ஏற்படும் உடல் உபாதைகளைப் போக்குகிறது.
அலர்ஜியைப்போக்குகிறது
உடலில் ஏற்படும் அலர்ஜியைப் போக்குகிறது. புதினாவில் உள்ள 53 உட்பொருட்கள் அலர்ஜிக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் அலர்ஜி மருத்துவத்துக்கு உதவுகிறது.
ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது
பாரம்பரிய மருத்துவத்தில் ஆஸ்துமாவைப் போக்க உதவுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு ஆஸ்துமாவைப் போக்குகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது
புதினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. இரண்டு ஸ்பூன் புதினாவில், 0.4 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. 0.9 கிராம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 0.8 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. 1.5 மில்லி கிராம் வைட்டமின் சி, 22.4 மில்லி கிராம் கால்சியம், 6.8 மில்லிகிராம் பாஸ்பரஸ், 51.5 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
பக்கவிளைவுகள்
வாயுத்தொல்லை உள்ள நபர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். இது நுகர்வுக்கு ஏற்றதுதான் என்றாலும் அளவுக்கு மிஞ்சக்கூடாது.
அல்சர் உள்ளவர்கள் இதை அதிகம் எடுக்கும்போது வயிற்றில் எரிச்சல் ஏற்படும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மெந்தால் எண்ணெய் பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். எனவே குழந்தைகள் கையில் படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

டாபிக்ஸ்