Benefits of Masturbation : செக்ஸ்வல் ஆர்கஸம் மட்டுமல்ல; சுயஇன்பத்தால் உடலுக்கு எத்தனை நன்மைகள் பாருங்கள்!
அதிகம் செய்யக்கூடாத சுய இன்பம் உங்கள் உடலுக்கு நன்மையைக் கொடுக்கிறது. அது நல்ல உறக்கம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
பிறப்புறுப்புகளை தூண்டி தங்களுக்கு தாங்களாவே செக்ஸ்வல் இன்பத்தை அளித்துக்கொள்வது சுய இன்பம் எனப்படுகிறது. பெரும்பாலானவர்கள் அதை செய்வார்கள் மற்றும் சிலர் அதுகுறித்து அதிகம் பேசுவார்கள்.
பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரியஸ் என்ற உறுப்பை தூண்டுவதன் மூலம் பெண்களும், பீனிஸை தூண்டுவதன் மூலம் ஆண்களும் சுய இன்பம் பெறமுடியும்.
ஆர்கஸம் கிடைத்தவுடன் நிறுத்தப்படுகிறது. இது செக்ஸ்வல் திருப்தியை மட்டும் கொடுக்கவில்லை. மனஅழுத்தத்தை குறைக்கிறது. மனநிலையை மாற்றுகிறது. நல்ல உறக்கத்துக்கும் வழிவகுக்கிறது.
சுய இன்பம் குறித்து சில எதிர்மறை எண்ணங்கள் உள்ளது. இதுகுறித்த கட்டுக்கதைகளும் நிறைய உள்ளது. அதனால் இதுகுறித்து பேசுவது அல்லது செய்வது குற்றமாகவும், அவமானமாகவும் கருதப்படுகிறது. சில கலாச்சாரங்களில் இது உடல் மற்றும் மனரீதியான அவமானமாக கருதப்படுகிறது.
செக்ஸ்வல் இன்பத்துக்காக நாமே நமது பிறப்புறுப்புக்களை தூண்டுவது நல்லதா கெட்டதா? நிபுணர்கள் கூறுவது என்ன?
இது பொதுவானது என்றும், 65 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் இதைச் செய்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. சுயஇன்பம் செய்வதற்கு வயது மற்றும் பாலினம் வேறுபாடு இல்லை.
சுய இன்பம் தரும் நன்மைகள்
மனஅழுத்ததைப் போக்குகிறது
சுயஇன்பம் இயற்கையாக மன அழுத்தத்தை போக்கும் ஒன்றாக கருதப்படுதிறது. ஆர்கஸம் அடையும்போது, நமது உடல் எண்டோர்பின் என்ற உடலுக்கு இன்பம் தரும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த எண்டோஃபின்கள், மனஅமைதியை ஏற்படுத்தி உங்கள் மனநிலையை மாற்றுகின்றன. இதனால் உங்கள் மனஅழுத்தம் குறைகிறது. இதை ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
ஆழ்ந்த உறக்கம்
ஆர்கஸம் அடையும்போது நமது உடல் ஆக்ஸிடோசின் மற்றும் ப்ரோலாக்டின் ஆகிய ஹார்மோன்களை வெளியிடுகிறது. இவை உங்கள் மனதை அமைதிப்படுத்தப்படுகிறது. இதனால் உங்கள் மன அழுத்தம் குறைகிறது. தொடர்ந்து சுயஇன்பம் பெறும்போது உங்கள், உறக்கத்தை மேம்படுத்துகிறது.
இதனால் உங்களின் ஓய்வு மேம்படுத்தப்படுகிறது. உங்களை உற்சாகப்படுத்துகிறது. உறக்கத்தின் தரம் மற்றும் தாமதமான உறக்கம் ஆகியவை ஏற்படும்போது, அதற்கு சுயஇன்பம் உதவுகிறது. ஆர்கஸத்துக்குப்பின் உங்கள் உரக்கத்தின் தரம் உயர்ந்தது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனநிலையை மேம்படுத்துகிறது
சுயஇன்பத்தில் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கிறது. எனவே சுயஇன்பம் செய்யும்போது உங்கள் உடலில் செரோடினின் மற்றும் டோப்பமைன் என்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கிறது.
இந்த வேதிப்பொருட்கள், உங்களின் நேர்மறை சிந்தனைகளை தூண்டி உங்கள் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கிறது.
செக்ஸ் ஆய்வு
சுயஇன்பம், உங்களுக்கு பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட சூழலை உருவாக்குகிறது. இதன் மூலம் உங்கள் உடலை நீங்கள் ஆராய முடியும். உங்களின் செக்ஸ்வல் தேவைகள் மற்றும் பதில்கள் ஆகியவற்றை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
இதன் மூலம் உங்கள் குறித்த புரிதல் உங்களுக்கு ஏற்படும். அவர்களுக்கு எது இன்பம் தருகிறது என்றும், அவர்கள் குறித்த விழிபுபணர்வும் ஏற்படுகிறது. இது அவர்களின் செக்ஸ்வல் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
வலி நிவாரணம்
சுயஇன்பம் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. ஆர்கஸத்தின்போது வெளியாகும் எண்டோர்ஃபின்கள், இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது.
அது அமைதி ஏற்படுத்துவதுடன், அசவுகர்யங்களைப் போக்குகிறது. உடல் டோப்பமைன் மற்றும் செரோடினினை வெளியிடுகிறது. இதனால் சுயஇன்பம் இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது.
எதுவும் மிதமான அளவில் இருக்கும்போது, உடலுக்கு நன்மை கொடுக்கிறது. எனவே சுயஇன்பத்தை அளவாக செய்து மகிழ்வாக வாழுங்கள்.
டாபிக்ஸ்