Benefits of Makhana : மூளையை சுறுசுறுப்பாக்கும்! இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! மக்கானாவின் நன்மைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Makhana : மூளையை சுறுசுறுப்பாக்கும்! இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! மக்கானாவின் நன்மைகள்!

Benefits of Makhana : மூளையை சுறுசுறுப்பாக்கும்! இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! மக்கானாவின் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Apr 05, 2024 04:17 PM IST

Benefits of Makhana : நெய்யில் வறுத்த மக்கானாவை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?

Benefits of Makhana : மூளையை சுறுசுறுப்பாக்கும்! இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! மக்கானாவின் நன்மைகள்!
Benefits of Makhana : மூளையை சுறுசுறுப்பாக்கும்! இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்! மக்கானாவின் நன்மைகள்!

வெள்ளை நிறத்தில் பொரிபோல் இருக்கும் மக்கானாவை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்

மக்கானா, ஃபாக்ஸ் நட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது தாமரை விதைகள். இது நீர்த்தாவரத்தின் விதைகள், பெரும்பாலும், ஆசிய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது சமையலுக்கும், வறுத்தும் அல்லது ஸ்னாக்ஸாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மக்கானாவை நெய்யில் வறுத்து சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது நெய்யில் வறுத்த மக்கானா, ஒரு சிறந்த ஸ்னாக்காக கருதப்படுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், உடல் நலனையும் உறுதிப்படுத்துகிறது.

செரிமான மண்டலம்

நெய்யுடன் மக்கானா சேர்த்து சாப்பிடும்போது, செரிமானத்துக்கு உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. செரிமானக் கோளாறுகளை போக்குகிறது. வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்றவற்றை தடுக்கிறது. அதற்கு இதில் உள்ள நீர்ச்சத்தும், ஆற்றுப்படுத்தும் சக்தியுமே காரணமாகும்.

எடை மேலாண்மை

மொறு, மொறுப்பான, சுவை நிறைந்த, திருப்தியளிக்கக் கூடிய நெய்யில் வறுத்த மக்கானாவில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம். இதனால் இது நல்ல ஒரு ஸ்னாக்ஸ் ஆகிறது. இது பசியை கட்டுப்படுத்தி, எடை குறைப்பிலும் உதவுகிறது. இதனால் உங்கள் உடல் எடை சரியான அளவில் பராமரிக்கப்படுகிறது.

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது

இதில் உள்ள எண்ணிலடங்கா கார்போஹைட்ரேட்கள், உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் உள்ள நெய், உடனடி ஆற்றலைக்கொடுக்கிறது. இதில் உள்ள மிதமான ட்ரைகிளிசரைட்கள், இந்த ஸ்னாக்ஸை ஒரு ஆற்றல் நிறைந்த ஸ்னாக்ஸ் ஆக்குகிறது.

எலும்பு ஆரோக்கியம்

இதில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது வைட்டமின் டியையும் சேர்த்து உறிஞ்சுவதால், நெய்யுடன் இதை சாப்பிடும்போது எலும்பு ஆரோக்கியம் மேம்படுகிறது. எலும்பு உருக்கி நோய் போன்றவற்றை தடுக்கிறது. வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குகிறது.

இதய ஆரோக்கியம்

நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் கொழுப்பு அளலை அதிகரித்து, இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. மக்கானாவில் உள்ள குறைவாக சோடியம், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் காக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

சர்க்கரையை குறைவாக உறிஞ்சும் உணவுப்பட்டியலில் மக்கானா உள்ளது. இதில் உள்ள நெய்யின் சர்க்கரையை குறைவாக உறிஞ்சும் திறனால், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல ஒரு ஸ்னாக்ஸ் ஆகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

நெய்யில் பட்டிரிக் அமிலம் உள்ளது, இது உள்ள குறைவான ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உடலில் வீக்கத்தை குறைக்கிறது, நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. அதன் மூலம் ஒட்டுமொத்த உடல் நலனை காக்கிறது.

மூளை செயல்பாடு

இதில் உள்ள ஆரோக்கிய கொழுப்புகள், மூளையின் இயக்கத்தையும், நினைவாற்றல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. மக்கானாவில் உள்ள மெக்னீசியம், நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்கிறது. நெய்யில் வறுத்த மக்கானா, மூளையை ஆரோக்கியமாக்கும் ஸ்னாக்ஸ் ஆகும்.

சருமம் மற்றும் தலைமுடி

நெய்யில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. சருமத்தில் இளமை தோற்றத்தை தக்கவைக்கிறது. ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை தினமும் சரிவிகித உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது, உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.