Benefits of Long Beans : கண் ஆரோக்கியம், இதய நலன் என பச்சை காராமணியில் உள்ள நன்மைகள் எத்தனை பாருங்கள்!
Benefits of Long Beans : கண் ஆரோக்கியம், இதய நலன் என பீன்ஸ் போலேவே உள்ள பச்சை காராமணியில் உள்ள நன்மைகள் எத்தனை என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Long Beans : கண் ஆரோக்கியம், இதய நலன் என காராமணியில் உள்ள நன்மைகள் எத்தனை பாருங்கள்!
பச்சை காராமணியின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள்
கலோரிகள் குறைவானது. 100 கிராம் காராமணியில் 47 கலோரிகள் உள்ளது. காராமணியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இது குடலை பாதுகாக்கிகறது. குடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகளை கொல்கிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு என்பது எல்டிஎல் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. குடலில் பித்த அமிலங்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. ஃபிரஷ் காராதணியில் ஃபோலோட்கள் உள்ளது. 100 கிராம் காராமணி உங்களின் அன்றாட ஃபோலேட் தேவையில் 15 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
இதில் உள்ள வைட்டமின் பி12 செல்கள் பிரிவதற்கு முக்கிய காரணியாகின்றன. கர்ப்ப காலத்தில் இந்த ஃபோலேட்களின் அளவு அதிகம் இருக்கவேண்டும். அது பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு கோளாறுகள் ஏற்படமால் தடுக்கிறது.