Benefits of Lemon Leaves : பழம் பல நன்மைகள் கொண்டது தெரியும்! அதன் இலையில் இத்தனை நற்குணங்கள் உள்ளதா?
Benefits of Lemon Leaves : எலுமிச்சை பழமரத்தின் இலையில் எத்தனை நன்மைகள் உள்ளதென்று பாருங்கள். அதை சமையலறையில் எப்படி பயன்படுத்தலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
எலுமிச்சை இலையின் பயன்கள் மற்றும் சமையலறை பயன்பாடுகள்
எலுமிச்சை அளவுக்கு இணையான மருத்துவ குணங்களைக் கொண்டது எலுமிச்சை மர இலைகளின் தேநீர். எலுமிச்சை பழத்தின் நன்மைகளை மட்டும் நாம் தெரிந்துகொண்டு, இலையின் பலன்களை மறந்துவிடுகிறோம். இதில் இருந்து பெறப்படும் நன்மைகள் குறைவாக தெரிந்துள்ளது.
எலுமிச்சை இலையை கசக்கினால் அதிலிருந்து கிடைப்பது ஃபிரஷ்ஷான சிட்ரஸ் மணம். இந்த பசும் இலைகள், உங்களின் மனநிலையை மாற்றும், மனஅழுத்ததை குறைக்கும் மற்றும் உங்களை ரிலாக்ஸாக்கும் இன்னும் பலவற்றையும் செய்யும்.
எலுமிச்சை இலையின் சமையலறை பயன்பாடு
எலுமிச்சை இலைகளை நாம் நேரடியாக உட்கொள்வதில்லை. அதை டீ, சூப் மற்றும் சாஸ்களில் சேர்த்து பயன்படுத்துகிறோம். கூடுதலாக, எலுமிச்சை இலைகளை ஆயுர்வேத மருத்துவத்திற்கும் பயன்படுத்துகிறோம். இதை சமையலறையில் பயன்படுத்தும்போது கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
எலுமிச்சை இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள், ஃபினோலிக் ஆசிட்கள், வைட்டமின் சி ஆகியவை உள்ளது. இந்த உட்பொருட்கள், உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படுகிறது.
செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது
எலுமிச்சை இலையில் செரிமான மண்டலத்தை காக்கும் உட்பொருட்கள் உள்ளது. இது செரிமானத்தை இலகுவாக்குகிறது. இது வயிறு உப்புசம், வாயு மற்றும் செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
எலுமிச்சை இலைகளில் உள்ள உட்பொருட்கள், வீக்கத்துக்கு எதிரான நற்குணங்களைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தை குறைக்க உதவுகிறது. உடல் முழுவதிலும் உதவுகிறது. இது ஆர்த்ரிட்டிஸ் போன்ற நிலைகளுக்கு நன்மை கொடுக்கிறது. குடல் வீக்கம் மற்றும் மற்ற வீக்க பிரச்னைகளை சரிசெய்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது
எலுமிச்சை இலையில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இது தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது
எலுமிச்சை இலைக்ளை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் அமைதி பெறுகிறது. இது மனஅழுத்தத்தை குறைக்கிறது. பயம், பதற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. எலுமிச்சை இலையில் உள்ள வாசம், உடல் மற்றும் மனம் இரண்டையும் காக்கிறது.
கழிவு நீக்கம்
எலுமிச்சை இலையில் உள்ள உட்பொருட்கள், கல்லீரலை காக்கிறது. அது இயங்குவதற்கு உதவியாக உள்ளது. இதனால் கழிவுநீக்கத்துக்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுவதோடு, ஒட்டுமாத்த உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனை காக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது
எலுமிச்சை இலையில் கலோரிகள் குறைவாக உள்ளது. அதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது வயிறு நிறைந்த உணர்வைக்கொடுத்து, அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது. உங்கள் உணவில் எலுமிச்சை இலைகளை சேர்த்துக்கொண்டால், அது உங்களின் சரிவிகித உணவு திட்டத்துக்கு வழிவகுக்கிறது. இது உங்களின் எடை குறைப்பு அல்லது எடை மேலாண்மை பயணத்துக்கு உதவுகிறது.
பல் ஆரோக்கியத்துக்கு நல்லது
எலுமிச்சை இலைகள் அல்லது இதைப்பயன்படுத்தி தயாரிக்கப்படும் மவுத் வாஷ்கள் பல் ஆரோக்கியம் மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்குகின்றன. வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் அழித்து நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. எலுமிச்சை இலையில் உள்ள ஆன்டி மைக்ரோபையல் உட்பொருட்கள், பல் பிரச்னைகளைத் தடுக்கிறது. அது கேவிட்டிஸ் மற்றும் ஈறுகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துகிறது.
டாபிக்ஸ்