தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Ladies Finger : வெண்டைக்காயை சாப்பிடுவதால் கணக்கு மட்டுமல்ல எத்தனை நன்மைகள் கிடைக்கிறது பாருங்க!

Benefits of Ladies Finger : வெண்டைக்காயை சாப்பிடுவதால் கணக்கு மட்டுமல்ல எத்தனை நன்மைகள் கிடைக்கிறது பாருங்க!

Priyadarshini R HT Tamil
Jun 07, 2024 07:30 AM IST

Benefits of Ladies Finger : வெண்டைக்காயை சாப்பிடுவதால் கணக்கு மட்டுமல்ல எத்தனை நன்மைகள் கிடைக்கிறது பாருங்கள். தினமும் உணவில் சேர்க்கலாம்.

Benefits of Ladies Finger : வெண்டைக்காயை சாப்பிடுவதால் கணக்கு மட்டுமல்ல எத்தனை நன்மைகள் கிடைக்கிறது பாருங்க!
Benefits of Ladies Finger : வெண்டைக்காயை சாப்பிடுவதால் கணக்கு மட்டுமல்ல எத்தனை நன்மைகள் கிடைக்கிறது பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது இந்த வெண்டைக்காய். உலகின் பல்வேறு நாடுகளில் விளைகிறது. இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும் காய்களுள் ஒன்று இந்த வெண்டைக்காய். இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் வெண்டைக்காயில் 7.03 கிராம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. 2 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு, 9 சதவீதம் நார்ச்சத்துக்களும் உள்ளது. இதில் ஃபோலேட், நியாசின், வைட்டமின் சி, இ, கே ஆகியவையும் உள்ளன. மேலும் இதில் கால்சியம், காப்பர், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களும் நிறைந்துள்ளன.

வெண்டைக்காயின் நன்மைகள்

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

வெண்டைக்காயில் கொழுப்பு அறவே கிடையாது. இதில் பெக்டின் என்ற உட்பொருள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மைகொண்டது. இந்த கெட்ட கொழுப்பு இதய நோயை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் அதிகம் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு இதய நோய் ஏற்படாமல் காக்கப்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் சர்க்கரையை மெதுவாக ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இதனால் செரிமானம் குறைவாக நடக்கிறது. எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவி திடீரென உயர்வதில்லை. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலனைத்தருகிறது.

சர்க்கரை நோயாளிகள், வெண்டைக்காயை வெட்டி தண்ணீரில் ஓரிரவு ஊறவைத்து, அந்த தண்ணீரை அடுத்த நாள் பருகினால், நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும். மேலும் பச்சையாக உட்கொள்ளக்கூடிய காய்களும் ஒன்று வெண்டைக்காய்.

புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது

மற்ற காய்கறிகளைவிட வெண்டைக்காயில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடல் செல்களில் ஆக்ஸிடேட்டில் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது. இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான செரிமான மண்டலத்தைக் கொடுக்கின்றன. இது குடல் புற்றுநோயைத் தடுக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

வெண்டைக்காயில், அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, பொதுவான தொற்றுக்களை தடுக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில், தினமும் உட்கொள்ளவேண்டிய வைட்டமின் சி சத்தில், 40 சதவீதம் உள்ளது.

அனீமியாவைத் தடுக்கிறது

வெண்டைக்காயில், அதிகளவில் வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது ரத்தத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் அனீமியாவைத் தடுக்கிறது.

உடல் எடை குறைப்பில் உதவுகிறது

100 கிராம் வெண்டைக்காயில் 33 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக உள்ளது. இதில் உள்ள உயர் நார்ச்சத்துக்கள், உங்களுக்கு நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நீங்கள் அதிக கலோரிகள் உட்கொள்வது தடுக்கப்படுகிறது.

குடல் புற்றுநோயைத் தடுக்கிறது

வெண்டைக்காயில், அதிகளவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் செரிமான மண்டலம் முழுவதையும் சுத்தம் செய்யக்கூடிய தன்மை கொண்டது. குறிப்பாக குடலை சுத்தம் செய்யக்கூடியது. இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. மேலும் குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு சிறந்தது

ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம் என்பது கரு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. வெண்டைக்காயில் அதிகளவில் ஃபோலேட்கள் உள்ளது. இதனால் இது குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சி சீராகவும், முறையாகவும் நடப்பதை உறுதி செய்கிறது.

குறிப்புகள்

வெண்டைக்காயை வாங்கும்போது, அதன் பின்புறம் கிள்ளி, இளம் வெண்டைக்காய்களாக மட்டுமே வாங்கவேண்டும்.

இதை வறுத்து சாப்பிடும்போது உங்கள் உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. எனவே வேகவைத்து சாப்பிடவேண்டும்.

இது சாம்பார், சூப், குடைமிளகாயுடன் வறுவல் என பல்வேறு வழிகளில் உட்கொள்ளப்படுகிறது.

வெண்டைக்காயை வேகவைக்கும் முன் அதை எண்ணெயில் வறுக்கவேண்டும். அப்போதுதான் அதன் பிசுபிசுப்புத்தன்மை குறையும்.

WhatsApp channel

டாபிக்ஸ்