Benefits of Kattuyanam Rice : நீரிழிவை கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்! காட்டு யானம் அரிசியின் நன்மைகள்!
Benefits of Kattuyanam Rice : பாரம்பரியம் பாதுகாப்போம் என்ற இந்த புதிய தொடரில் நாம், தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
காட்டு யானம் அரிசியின் பெயர் காரணமே வித்யாசமானதுதான். இந்த அரிசியை தென்னிந்திய விவசாயிகள் பெரும்பாலும் விளைவிக்கிறார்கள். அவர்கள் விளைவிக்கும் பாரம்பரிய அரிசிகளில் ஒன்று காட்டுயானம் அரிசி. இதன் ஒவ்வொரு மணியும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
நீண்ட நாட்களாக இந்தியாவில் பயிரிடப்பட்டு வரும் அரிசிகளுள் ஒன்று காட்டு யானம் அரிசி. காட்டு அல்லது காடு என்பது காட்டை குறிக்கும், யானை என்பது விலங்கை குறிக்கும். இந்த இரண்டு வார்த்தைகளின் கலவைதான் காட்டு யானம். இந்த அரிசியின் கருதுகள் 7 அடி வரை வளரக்கூடியவை, அதனுள் ஒரு காட்டு யானை கூட ஒளிந்துகொள்ளும் அளவுக்கு வளரும் என்பதால் இதற்கு இந்தப்பெயர்.
இதை சமைத்தால் ஒட்டாமல் வரும். சமைக்கவும் நீண்ட நேரம் எடுக்கும். சாப்பிட்டால் செரிமானம் ஆகவும் நீண்ட நேரம் எடுக்கும். இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. எண்ணற்ற நுண்ணுட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது.
100 கிராம் காட்டுயானம் அரிசியில் 189 கலோரிகள் உள்ளன. 42.55 கிராம் கார்போஹைட்ரேட்கள், 0.32 கிராம் கொழுப்பு, 3.81 கிராம் புரதம், 0.7 கிராம் நார்ச்சத்துக்கள், 273 மில்லிகிராம் சோடியம், 102 மில்லிகிராம் பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி6 ஆகிய சத்துக்கள் உள்ளன.
காட்டுயானம் பாரம்பரிய அரிசியில், பாயாசம் செய்யலாம். இட்லி, தோசை, இடியாப்பம், கஞ்சி என அனைத்தும் செய்ய முடியும். இது சிவப்பு அரிசி வகைகளுள் வரும். சிவப்பு நிற அரிசி வகைகளே மற்ற வெள்ளை அரிசி வகைகளைவிட நமது உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மற்ற பாரம்பரிய அரிசிகளைப்போல் இதிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
சரும ஆரோக்கியம்
காட்டு யானம் அரிசி சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் ஆந்தோசியானின் உள்ளது. இது வயோதிகத்தை மெதுவாக்குகிறது. சொரியாசிஸ் மற்றும் சரும புற்றுநோய் ஆகியவற்றை குணமாக்க உதவுகிறது. ஆந்தோசியானின் நமது சருமத்தை இளமையுடன் பராமரிக்கிறது. இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்.
இந்த அரிசியின் சிவப்பு நிறத்துக்கு இந்த ஆந்தோசியானின் என்ற ஃப்ளேவனாய்ட் தான் காரணமாகிறது. இந்த ஆந்தோசியானின் புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கிறது. ஆந்தோசியானின் கல்லீரல் பிரச்னைக்கு தீர்வாகிறது.
நீரிழிவு நோய் கட்டுப்பாடு
காட்டுயானம் அரிசியின் மற்றொரு நன்மை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது ஆகும். மற்ற அரிசிகளைவிட, இதில் கார்போஹைட்ரேட்கள் குறைவாகவே உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கச் செய்யும். சர்க்கரையை குறைக்க உதவுகிறது. 2ம் வகை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது நன்மை கொடுக்கிறது.
மலச்சிக்கலைப் போக்கும்
காட்டு யானம் அரிசி மலச்சிக்கலைப்போக்கும் அல்லது தடுக்கும். இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரில் கரைந்து, ஜெல் போன்ற பொருளை உருவாக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது.
கரையாத நார்ச்சத்துக்கள் தண்ணீரில் கரையாது, அது செரிமான மண்டலத்தில் உணவை நகர்த்த உதவும். அதன் மூலம் மலம் வெளியேறும். இதனால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மலம் எளிதாக வெளியேறும். குடல் இயக்கத்தை வழக்கமாக்கி, உங்கள் குடல் ஆரோக்கியத்தை காக்கிறது.
இது உடலுக்கு ஆரோக்கியம் கொடுப்பது மட்டுமின்றி சுற்றுசூழலுக்கும் உதவுகிறது. இதில் உள்ள எண்ணற்ற நார்ச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் உங்கள் உடலுக்கு நல்லது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் உகந்தது. இந்த பயிர்கள் மண் ஆரோக்கியத்தை பேணும் ஆற்றல் கொண்டவை. வெள்ளத்தை கூட தடுக்கும்.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நன்மை கொடுக்கின்றன. இரும்புச்சத்துக்கள், சிங்க் மற்றும் மாங்கனீஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன. இது ரேடிக்கல்களுக்கு எதிராக போராடி திசுக்களையும், செல்களையும் காக்கிறது. காயங்களை முற்றிலும் குணப்படுத்துகிறது.
இந்த அரிசியை அதிகம் உட்கொள்வது ஆபத்தைக் கொடுக்கும். இது போதை மருந்தாக கூறப்படுகிறது. எனவே பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், 20 வயதுக்கும் உட்பட்டவர்கள் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு இது தலைவலியைக் கொடுக்கும். இதய எரிச்சல் மயக்கம், வயிற்றி வலி, தசை வலி ஆகியவை இந்த அரிசியை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படுகிறது. எனவே இதை எடுத்துக்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும்.
டாபிக்ஸ்