Benefits of Karunkuruvai Rice : கடும் காய்ச்சலையும் அடித்து விரட்டும்; கருங்குறுவை அரிசியின் நன்மைகளை பாருங்கள்!
Benefits of Karukuruvai Rice : பாரம்பரியம் பாதுகாப்போம் என்ற இந்த புதிய தொடரில் நாம், தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கருங்குறுவை அரிசி, சிவப்பரிசி என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள பொதுவான அரிசி வகை. இதன் சிவப்பு நிறமும், சுவையும், அதிக ஊட்டச்சத்துக்களுக்காகவும் இது அறியப்படுகிறது.
கருங்குறுவையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் வைட்டமின்கள் மினரல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
இந்த அரிசியில் சமைத்த ஒரு கப் சாதத்தில் 216 கலோரிகள் உள்ளது. புரதம் 5 கிராம், கார்போஹைட்ரேட்கள் 47 கிராம், நார்ச்சத்துக்கள் 3 கிராம், கொழுப்பு ஒரு கிராம், இரும்புச்சத்துக்கள் 5 சதவீதம், மெக்னீசியம் 21 சதவீதம், பாஸ்பரஸ் 16 சதவீதம் உள்ளது.
ஆரோக்கிய நன்மைகள்
இதய ஆரோக்கியம்
கருங்குறுவை அரிசியில் நார்ச்ச்த்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது இதய நோய் ஆபத்தை குறைக்க உதவும். மற்ற அரிசிகளைவிட சிவப்பரிசியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அது ஆக்ஸிடேட்வில் அழுத்தத்தில் இருந்து இதயத்தை காக்கிறது.
எடை மேலாண்மை
நார்ச்சத்துதக்கள் நிறைந்துள்ளதால், கருங்குறுவை சாப்பிட்டு, நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும். இது ஒட்டுமொத்த வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்
ஆரோக்கியமான முறையில் செரிமானத்தைக் கொடுக்கும். மலச்சிக்கலை தடுக்கும். இது மாவுச்சத்துக்கள் நிறைந்தது. இது ப்ரீபயோடிக்காக செயல்பட்டு, குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க உதவுகிறது.
ஆயுர்வேத பயன்பாடுகள்
ஆயுர்வேத மருத்துவத்தில் கருங்குறுவை அரிசியில் உடலை குளிர்விக்கும் உட்பொருட்கள் உள்ளது. அது செரிமான கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. சரும நோய்கள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றையும் குணப்படுத்த உதவுகிறது. பித்தம் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இந்த அரிசி மிகவும் நல்லது. உடல் சூடு, அசிடிட்டி, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
செரிமான கோளாறுகள்
கருங்குறுவை அரிசி வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை போன்ற கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. இதில் உடலை குளிர்விக்கு தன்மை உள்ளது. அது செரிமான மண்டலத்தை சீர்செய்து, வீக்கத்தை குறைக்கிறது.
சரும நோய்கள்
கருங்குறுவை அரிசி, சரும நோய்களை குணப்படுத்த உதவுகிறது. சொரியாசிஸ், ஈசிமா மற்றும் முகப்பருக்களை குணப்படுத்துகிறது. சருமத்தை குளிர்விக்கும் குணங்கள் கொண்டதாக உள்ளது. இது வீக்கத்தையும் குறைக்கிறது.
காய்ச்சல்
உடலின் சூட்டை குறைத்து கடும் காய்ச்சலுக்கு கூட சிகிச்சையளிக்கும் தன்மை கொண்டது இந்த கருங்குறுவை அரிசி. இது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கக் கூடியது. இதை இடித்து தண்ணீருடன் கஞ்சியாக்கி காய்ச்சல் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுத்தால் அது காய்ச்சலைக் குறைக்க உதவும்.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது கருங்குறுவை அரிசி, பல நன்மைகளையும் உடலுக்கு வழங்குகிறது. ஆயுர்வேத மருத்துவம், இதன் மருத்துவ குணங்களுக்காக இந்த அரிசியை பயன்படுத்த அறிவுறுத்துகிறது. இதை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம். ஆரோக்கிய உணவில் கருங்குருவையை சேர்த்துக்கொள்ளலாம்.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இந்த அரிசியை அவ்வப்போது உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறுங்கள். நமது பாரம்பரிய அரிசி வகைகள் குறித்து விழிப்புணர்வு தற்போது பரவலாகி வருகிறது.
டாபிக்ஸ்