Tamil News  /  Lifestyle  /  Benefits Of Kalarchikai Which Protects Uterus
கழற்சிக்காயின் மருத்துவப் பலன்கள்
கழற்சிக்காயின் மருத்துவப் பலன்கள்

பெண்களின் கர்ப்பப்பையை பாதுகாக்கும் கழற்சிக்காயின் மருத்துவப் பலன்கள்

23 March 2023, 23:55 ISTI Jayachandran
23 March 2023, 23:55 IST

Womens Health: பெண்களின் கர்ப்பப்பையை பாதுகாக்கும் கழற்சிக்காய் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

பல்வேறு பிரச்னைகள் காரணமாக பெண்களின் கர்ப்பப்பைகளில் நோய்த்தொற்றுகள் இப்போது அதிகரித்து வருகினறன. இதனால் குழந்தைப் பேறுக்கே ஊறு விளைந்து விடுகிறது. கர்ப்பைப்பை கோளாறுகளால் பல நேரங்களில் மிக இள வயதிலேயே கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய சோகமான சூழ்நிலைகளும் உருவாகின்றன.

பெண்மைக்கு ஆதாரமான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இந்தக் கர்ப்பப்பையில் தான் சுரக்கிறது. இந்த ஹார்மோனால் பெண்மையின் மென்மையும், சரும அழகும், இதயம் மற்றும் எலும்பு பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைக்கும்.

பெண்களுக்கு இன்றியமையாத கர்ப்பப்பையை பாதுகாக்கும் கழற்சிக்காய் எனப்படும் மூலிகை பலன்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

கழற்சிக்காயை காய வைத்து அரைத்து பவுடராக்கி தினமும் ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தால் கர்ப்பப்பையில் தோன்றும் அழற்சிகள், தொற்றுகளைப் போக்கிவிடும். கர்ப்பப்பையை பாதுகாக்கும்.

புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும்.

தழும்புகள் ஏற்படுவதையும் தடுக்கும். வீக்கம் அடிபடுதல் மற்றும் உடலின் சில பாகங்களில் சுளுக்கு ஏற்படுவதாலும் அப்பகுதியில் அதிகளவில் வீக்கம் ஏற்படுகிறது.

கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும்.

வயிற்று பிரச்னைகள் பலருக்கும் அவர்களின் வயிற்றில் வாயு கோளாறுகள், மலச்சிக்கல், குடற்புழு மற்றும் இதர வயிறு சார்ந்த பிரச்னைகளால் அவதியுறுகின்றனர். இப்படியான நிலையிலில் இருப்பவர்களுக்கு கழற்சிக்காய் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும்.

ஈரல் நமது உடலுக்கு நோய்களை எதிர்த்து நிற்கும் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருக்கும்

கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது கல்லீரல் பலம் பெறும். அதன் செயல்பாடுகளும் மேம்பாட்டு உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

கழற்சிப்பருப்பு சின்கோனா எனப்படும் கொயினா மாத்திரைக்குப் பதில் மலேரியா காய்ச்சலைப் போக்க உள்ளுக்குத் தர விரைவில் குணமாகும்.

கழற்சிப்பருப்பு ஒன்றோடு ஐந்து மிளகு சேர்த்து அந்திசந்தி என இருவேளை உள்ளுக்குக் கொடுப்பதால் வாதக்காய்ச்சல், விட்டு விட்டு வரும் முறைக்காய்ச்சல், கர்ப்பப்பை வலி, கண்ட மாலை, அண்ட வாதம் ஆகியன குணமாகும்.

ஒரு சில ஆண்களுக்கு சமயங்களில் அடிபடுவதாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ அவர்களின் விரைகள் வீங்கி விடும். இப்படியான சமயங்களில் விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி,

வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.

கழற்சிக்காய் விதைகள் சிலவற்றை கடாயில் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வறுத்து, பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் சருமநோய்கள் கட்டுப்படும்.

கழற்சிக்காய் கொடிகளின் இலைகளை பக்குவம் செய்து உள்மருந்தாக சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியிருக்கும் யானைக்கால் வியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை அழிக்கிறது.

டாபிக்ஸ்