Benefits of Honey : தேனை நாம் ஏன் குளிர் காலத்தில் அதிகம் பயன்படுத்தவேண்டும்? 5 நன்மைகள் உள்ளதால்தானா?
தேனை ஏன் குளிர்காலத்தில் அதிகம் பயன்படுத்தவேண்டும் என்பதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் குளிர் காலத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகளுக்கும், கோடை காலத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகளுக்கு வித்யாசம் உள்ளது. குளிர் காலத்தில் உடலுக்கு சூடு தரும் உணவுகளை உட்கொள்கிறோம். வெயில் காலத்தில் உடலை குளுமைப்படுத்தும் உணவுகளை உட்கொள்கிறோம். அப்போதுதான் உடல் சமநிலையில் இருக்கும். குளிர் காலத்தில் அதிக குளிர் உங்களை பொதுவான தொற்றுகள் மற்றும் பல்வேறு காய்ச்சல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடும். உங்கள் உடலை குளிர் கால தொற்றுக்களில் இருந்து காத்துக்கொள்ளவேண்டுமெனில் நீங்கள் அதற்கு ஏற்றவாறு உணவுப்பழக்கத்தை மாற்றவேண்டும். உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக்கொள்ளவேண்டும். அதற்கு நீங்கள் தேனை முயற்சிக்கலாம். இது உங்கள் உடலை பாதுகாக்க உதவும். இது உங்களுக்கு சுவையான ஒன்று மட்டுமல்ல, உங்கள் உடலுக்கு குளிர் காலத்தை தாக்கு பிடிக்கும் 5 நன்மைகளைக் கொடுக்கிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
தேனில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள உட்பொருட்கள் குறிப்பாக குளிர் காலத்தில் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கெழடுக்கிறது. இது உங்களுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது
தேனிலி இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. குளுக்கோஸ் மற்றும் ஃப்ரூக்டோஸ் போன்றவை உள்ளதால், இது உங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. குளிர் காலங்களில் பெரும்பாலானோர் சோர்வுடன் இருப்பதற்கு காரணம், உடலின் ஆற்றல் குறைவதுதான். நீங்கள் தேனை எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.
