தேனின் நன்மைகள் : கோடைக் காலத்தில் தேன் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
இது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதில் உள்ள தாவர உட்பொருட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரண்டையும் பொருத்து தேன் வெளிர் நிறம் முதல் அடர் நிறம் வரை உள்ளது.

கோடை காலத்தில் தேன் தரும் நன்மைகள்
கோடையின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும்போது, உங்கள் உடலின் ஆரோக்கியம் மற்றும் நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே கடும் வெப்பத்தை அடித்து விரட்ட, நமக்கு உதவும் முக்கியமான ஒன்றான தேன் உள்ளது. பூக்களில் இருந்து தேனீக்கள் சேகரித்து, தேனை உருவாக்குகின்றன.
தேனின் நன்மைகள்
பல பலர்களில் இருந்து தேன் துளிகளை தேனீக்கள் சேகரிக்கின்றன. அதுதான் ஒவ்வொரு வகை தேனுக்கும் தனிச்சுவை மற்றும் தோற்றத்தை கொடுக்கிறது. ஒரு ஸ்பூன் தேனில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் நார்ச்சத்துக்கள், கொழுப்பு மற்றும் புரதம் ஆகிய அனைத்தும் குறைவாக உள்ளது. இது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதில் உள்ள தாவர உட்பொருட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரண்டையும் பொருத்து தேன் வெளிர் நிறம் முதல் அடர் நிறம் வரை உள்ளது.
சருமப் பொலிவு
சருமத்தை பொலிவாக வைத்துக்கொள்கிறது. இதில் உள்ள இயற்கையான நீர்ச்சத்துக்கள் மற்றும் ஈரத்தன்மையும், உங்கள் சருமம் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி அதை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. உங்கள் சருமத்தில் தேனை தடவுவதன் மூலம், சரும வறட்சி, சூரியனால் ஏற்படும் வெடிப்புகளை குறைத்து, உங்கள் சருமத்தை மிருதுவாக வைக்க உதவுகிறது. கடும் வெப்பத்தில் இருந்து உங்களை காக்கிறது.