Benefits of Guava Leaves : நாம் உணவில் அதிகம் எடுத்துக்கொள்ளாத இந்த இலைகளில் இத்தனை நன்மைகள் உள்ளளதா?
Benefits of Guava Leaves : இத்தனை நன்மைகள் நிறைந்த கொய்யா இலைகளை உங்கள் உணவில் சேர்த்தால், உங்கள் உடல் இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெறும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால், கொய்யா பழம் விற்பவர்களிடம் இருந்து கூட பெற்றுக்கொள்ளலாம்.
செரிமானத்துக்கு உதவுகிறது
கொய்யா இலைகளில் ஆன்டி-பாக்டீரியல் உட்பொருட்கள் உள்ளது. இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் செரிமானத்துக்கு உதவுகிறது. கொய்யா இலைகள் நல்ல மலமிலக்கியாக செயல்படுகிறது. மலத்தை இலக்கி மலச்சிக்கலை போக்குகிறது. இதனால் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது.
ரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோயாளிகள் அல்லது நோய் வரும் ஆபத்து உள்ளவர்களுக்கு கொய்யா இலைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நிலைப்படுத்துகிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் பராமரிக்க இந்த கொய்யா இலையில் தேநீர் செய்து பருகலாம். மேலும் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பூஸ்ட் செய்கிறது
கொய்ய இலைகளில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆகிஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்து உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உங்கள் உடலின் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதன் மூலம், நோய்கள் மற்றும் தொற்றுகள் என உங்கள் உடல் அனைத்தையும் எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது
கொய்யா இலைகளில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ராடிக்கல்களை சமப்படுத்துகிறது. இது செல்களின் சேதத்தை குறைக்கிறது.
இதனால் புற்றுநோய் கட்டிகள் வளர்வது தடுக்கப்படுகிறது. கொய்யா இலைகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டால், அது சில புற்றுநோய்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதியாக வழங்குகிறது.
இதய ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது
கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, கொய்யா இலைகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உங்கள் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இது இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
கண்பார்வை குறைபாட்டை சரிசெய்கிறது
கொய்யா இலைகளில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள், கண் பார்வைக்கு நல்லது. இந்த இலைகளை சாப்பிடுவது கண் பார்வையை கூராக்கும். கண் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது.
மனஅழுத்தத்தை குறைக்கிறது
கொய்யா இலையில் மனஅழுத்தத்தை குறைக்கும் உட்பொருட்கள் உள்ளது. இதனால் பதற்றம் குறைந்து, ஒட்டுமொத்த மனநலனும் மேம்படுகிறது. அவை உங்களின் மன அமைதிக்கு வழிவகுக்கிறது. மனஅழுத்தம் ஏற்படும்போது கொய்யா இலைகள் உங்களை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.
உடல் எடை இழப்புக்கு சிறந்தது
கொய்யா இலைகள் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.இதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இது கலோரிகளை குறைக்க உதவுகிறது. எடைக்குறைப்பு பயணத்தில் உள்ளவர்கள் தங்கள் உணவில் கொய்ய இலைகளை சேர்த்தால் உங்களக்கு நன்மைகள் கிடைக்கும்.
மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது
கொய்யா இலைகள் மாதவிடாய் வலிகளை குறைக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது. இதில் உள்ள குணங்கள் வலிகளை போக்கும். மாதவிடாயை மகிழ்ச்சியானதாக மாற்றும்.
சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்லது
கொய்யா இலைகளில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைய உள்ளது. இது சரும நோய்கள் மற்றும் முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இது உங்கள் சருமத்தை இறுக்கமாக்கச் செய்கிறது. இதனால் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த இலைகள் தலைமுடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த கொய்யா இலைகளை உங்கள் உணவில் சேர்த்தால், உங்கள் உடல் இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெறும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால், கொய்யா பழம் விற்பவர்களிடம் இருந்து கூட பெற்றுக்கொள்ளலாம்.
டாபிக்ஸ்