தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Garlic : தினமும் 6 பூண்டை வறுத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்!

Benefits of Garlic : தினமும் 6 பூண்டை வறுத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 23, 2024 11:20 AM IST

Benefits of Garlic : எனவே இரும்பு அல்லது சில்வர் கடாய் அல்லது தோசைக்கல்லில் வறுத்துக்கொள்ள வேண்டும். நான்ஸ்டிக் தவாவை மட்டும் பயன்படுத்தக்கூடாது. பூண்டு உள்ளே வெந்து வரவேண்டும். அதுபோல் வறுத்துக்கொள்ளவேண்டும். எண்ணெய், நெய் எதுவும் சேர்க்கத்தேவையில்லை.

Benefits of Garlic : தினமும் 6 பூண்டை வறுத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்!
Benefits of Garlic : தினமும் 6 பூண்டை வறுத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

எனவே இரும்பு அல்லது சில்வர் கடாய் அல்லது தோசைக்கல்லில் வறுத்துக்கொள்ள வேண்டும். நான்ஸ்டிக் தவாவை மட்டும் பயன்படுத்தக்கூடாது. பூண்டு உள்ளே வெந்து வரவேண்டும். அதுபோல் வறுத்துக்கொள்ளவேண்டும். எண்ணெய், நெய் எதுவும் சேர்க்கத்தேவையில்லை.

பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஆனால் காரம் அதிகம் இருக்கும். வாயில் துர்நாற்றம் வீசும். இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். சுட்ட பூண்டை ஆறவைத்து சாப்பிடவேண்டும். அதற்குப்பின்னர் மிதமான சூட்டில் தண்ணீர் பருகவேண்டும்.

இரவு உறங்கச் செல்வதற்கு அரைமணிநேரம் முன்னரும் சாப்பிடலாம். மதியம் உணவு உண்ட பின்னரும் சாப்பிடலாம். ஒரு நாளில் மூன்று வேளையில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இதுபோல வறுத்த பூண்டை சாப்பிட்டு, ஒரு டம்ளர் மிதமான சூட்டில் தண்ணீர் பருகும்போது, அது உங்கள் இரைப்பையில் உள்ள உணவை ஒரு மணி நேரத்தில் செரிக்கவைக்கிறது.

நாம் சாப்பிட்ட சாப்பாட்டில் உள்ள சத்தை எளிதாக உடல் உறிஞ்ச உதவுகிறது. உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. வாயுத்தொல்லையை சரிசெய்யவும், இடுப்பைச் சுற்றியுள்ள தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் வளர்சிதை அதிகரித்து, கெட்ட கொழுப்பை வெளியேற்றிவிடுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள், ரத்த நாளங்களில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இதை தினமும் எடுத்துக்கொள்ள உடலில் ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறது.

உடலில் ஃபரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. உடலில் கொழுப்பை சீராக பராமரிக்க உதவுகிறது. உடலில் உள்ள தமனிகளை சரிசெய்து இதயநோய் வராமல் பாதுகாக்கிறது. முக்கியமாக எலும்புகளுக்கு உறுதியைக் கொடுத்து, எலும்புகள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

பூண்டை சாப்பிடும்போது அது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். உடலில் தங்கியிருக்கும் கெட்ட வாயுக்களை கரைத்து வெளியேற்றும். வாழ்நாளை நீட்டிக்கும். உடலில் சோர்வை நீக்கும். ரத்த அழுத்தம், கொழுப்பு, மாரடைப்பு, பெருந்தமனி அடைப்பு ஆகியவற்றை தடுக்கிறது. ரத்த நாளங்களை சீரான முறையில் வேலை செய்ய உதவுகிறது.

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதால் உடல் எடை குறைக்க உதவும். ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். கை-கால் வலியைப்போக்கும். வாயுத்தொல்லை முற்றிலும் குறைக்கும்.

வறுக்காத பூண்டை சுளுக்குக்கு மருந்தாகப்பயன்படுத்தலாம். தேமலுக்கும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

பூண்டை இடித்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தின் மீது தடவினால் சுளுக்கு குணமாகும். பூண்டு மற்றும் வெற்றிலையை அரைத்து தேமல் மீது தடவினால் தேமல் மறைந்து ஓடும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாலில் பூண்டை கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் அந்தப் பிரச்னைகள் குணமாகும்.

புற்றுநோயாளிகள் இந்த பூண்டை வேகவைத்து சாப்பிடும்போது, அது அவர்களின் வலியை குறைக்க உதவும்.

இத்தனை நன்மைகள் நிறைந்த பூண்டை தினமும் உணவில் சேர்த்து அதன் முழுப்பலன்களையும் பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்