Benefits Of Flower Tea: பூக்களால் செய்யப்படும் டீ உடலுக்கு நன்மையா?
பூக்களால் செய்யப்படும் டீ உடலுக்கு நன்மையா என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
பூக்களால் உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு, அவை வழங்கும் ஆரோக்கிய நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்கலாம். இதன் மூலம் பல உடல்நல பிரச்னைகளில் இருந்து.விடுபடலாம்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் காலையில் டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள், ஏனெனில் காலையில் காஃபின் உட்கொள்வது சோம்பலை நீக்குகிறது, மேலும் மனம் புத்துணர்ச்சியை உணருகிறது. இதன் மூலம், உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றலை உணருவீர்கள், விளைவு உடனடியாக உங்களால் உங்கள் வேலையில் ஈடுபட முடியும்.
ஆனால் காலையில் டீ, காபி குடிப்பது நம்மை அதற்கு அடிமையாக்கிவிடும் ஒரு பழக்கம் தான். அவற்றை அதிக அளவில் உட்கொள்ளும் போது, அது உங்களை சிறிது நேரத்துக்்கு புத்துணர்வா்க இருப்பது போல உணர வைக்கும். ஆனால் தொடர்ந்து இவற்றை நீண்ட காலமாக உட்கொள்ள நேர்ந்தால், இது நமக்கு உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்னைகள், எடை அதிகரிப்பு, தாது குறைபாடு, குறைந்த ஆற்றல் மற்றும் பதற்றம் போன்ற பிரச்னைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
பூக்களின் வாசனை உங்களை ரம்மியமாக உணர வைக்கிறது. கெமோமில், இங்கிலீஷ் டெய்சி மற்றும் லைலாக்ஸ் ஆகியவை வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் போன்ற பல பண்புகள் கொண்டவை. மேலும் அவை உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படலாம். ரோஸ் எசன்ஸ் பல நூற்றாண்டுகளாக இனிப்புகள் மற்றும் சர்பத்களில் பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்குப் பிடித்தமான பூக்களின் சுவையை உங்கள் டீயில் சேர்த்து தயார் செய்தால், பூவின் சுவையுடன் பல ஆரோக்கிய நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
ரோஜா பூ
சிவப்பு ரோஜா இதழ்களை வெந்நீரில் சிறிது நேரம் விடவும். இந்த அற்புதமான டீயில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும். பெண்களின் டிஸ்மெனோரியா போன்ற பிரச்சனைகளுக்கு ரோஜா பூ டீ ஒரு நல்ல தீர்வாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
சாமந்தி பூ
சாமந்திப்பூவின் இனிமையான நறுமணத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் அதன் பூக்களிலிருந்து தயாரிக்கப்படும் டீயும் உங்களுக்கு பிடித்து விடும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் இந்த பூக்கள் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த மலர்கள் குறிப்பாக கட்டிகளை தடுக்கும் மற்றும் சைட்டோடாக்ஸிக் விளைவுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.
துளசி
நம் நாட்டில் துளசியை ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள். அதன் சில ஆரோக்கிய நன்மைகளை பற்றி உங்களுக்கும் தெரிந்திருக்க கூடும். நீங்கள் தினமும் ஒரு கப் துளசி பூ தேநீர் குடித்து வரலாம், அவ்வாறு குடிப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் ரசாயன பாதிப்புகளில் இருந்து உங்கள் உடல் பாதுகாக்ப்படும்.
செம்பருத்தி
செம்பருத்தி செடி பெரும்பாலும் நம் வீடுகளைச் சுற்றி நடப்படுகிறது. உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்த பிரச்னை இருந்தால், செம்பருத்தி டீ உங்களுக்கு அதிகமான நிவாரணம் தரும். செம்பருத்தி மலர் இதழ்களில் ஆன்டிபயாடிக் மற்றும் உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இந்த பூவில் இருந்து தயாரிக்கப்படும் டீயை உங்கள் அன்றாட உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
டாபிக்ஸ்